Friday, January 10, 2014

என் தோழியை நினைத்து சில கண்ணீர் துளிகள்

       தோழி என்கிற பெயரில் என் வாழ்க்கைக்குள் வந்தவளே உன்னை பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும். எனக்கு எத்தனை தோழிகள் இருந்தாலும் உன் போல் யாரும் எனக்கு துரோகம் செய்தது இல்லை. உன்னுடைய தேவைக்காக மட்டும் தான் நீ மற்றவர்களிடம் பழகுகிறாய் என்று சில மாதங்களுக்கு முன்பு தான் புரிந்து கொண்டேன்.  மனம் கேட்காமல் என் கணவருடன் சில செய்திகளை பகிர்ந்து கொண்டேன்.  எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை நீ கல்லூரியில் படிக்கும் போதுதான் அப்படி என்று நினைத்தேன்.... இப்போதுதான் புரிகிறது நீ எப்போதுமே அப்படிதான் உன்னை திருத்த முடியாது என்று.....

சில இறந்து போன செய்திகளை நாம் மறப்பது தான் நமக்கு நல்லது.  உனக்கு நல்லது என்று நான் செய்த விஷயம் உன் பார்வைக்கு கெட்டதாக தெரிகிறது.  அதற்க்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.
நான் செய்த காரியத்தால் உன் வாழ்க்கை இப்போது சந்தோஷமாக இருக்கிறது. அது எனக்கும் தெரியும் உன் குடும்பத்திற்கும் தெரியும், இதை நீ பொய் என்று சொல்ல முடியாது.

நீ என்னிடம் பல வருடங்களாக கேட்கும் ஒரு கேள்வி ..........அதை செய்தது நீயா என்று.

நன்றாக கேட்டுகொள் அதை செய்தது நான் தான்.  அதற்க்கு என்ன பதில் சொல்ல வேண்டுமோ என்னிடம் வந்து சொல்.  என்ன கேள்வி கேட்க வேண்டுமோ என்னிடம் வந்து கேள்.  அதை விட்டுவிட்டு என்னுடைய தோழிகளிடம் போய் உனக்கு நான் கேடு செய்ததாக பொய் சொல்லாதே அந்த கடவுளுக்கே அது பொறுக்காது.

உன்னை நான் என்னுடைய தோழியாக பார்த்தேன்.   ஆனால், நீயோ என்னை உன் தேவைகளுக்கு பயன்படுத்தும் ஒரு பொருளாகதான் பார்த்திருக்கிறாய்.  இதையெல்லாம் அறியாதவள் நான் இல்லை எல்லாம் எனக்கும் தெரியும்.  இது எல்லாம் தெரிந்தும் உன்னுடன் நான் தோழியாக இருக்க நான் ஒன்னும் பழைய கல்லூரி தோழி சுபத்ரா அல்ல.  அதை முதலில் தெரிந்துகொள்.  ஒருவர் பார்க்கும் பார்வையிலே என்ன காரணத்திற்காக என்னிடம் பழகுகிறார்கள் என்று சில நிமிடத்தில் கண்டு பிடித்துவிடுவேன்.

மறுபடியும் உனக்கு நான் சொல்லுவது இதுதான்.  எதையும் அறியாதவளாய், எதையும் யோசிக்காமல் உதவுவது, என்ன நடந்தாலும் முன் நின்று வாதாடுவது,  என்னை பற்றி யார் என்ன பேசினாலும் கண்டும் காணாமல்  சிரித்துக்கொண்டே போவது.  எவ்வளவுதான் மனதில் மற்றவர்களால் கவலை வந்தாலும் சேச்ச அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைன்னு எனக்கு நானே என் மனதை சமாதானம்படுத்திவிட்டு போவதற்கு நான் ஒன்றும் கல்லூரி படிக்கும் போது இருந்த சுபத்ரா அல்ல. இதை இப்போது தெளிவாக நீ புரிந்து கொண்டால் மற்ற விஷயங்களும் உனக்கு புரிய ஆரம்பிக்கும்.

என் வாழ்க்கை என்னும் பாடத்தில் எவ்வளவோ பாடம் நான் கற்றுவிட்டேன்.  அதில் இதுவும் ஒன்று....உன்னை விட்டு நான் விலகினாலும் என்னிடம் வந்து நீ உரையாட வந்தாய்.  நீயாக வந்து பேச வந்தால் என்னவாக இருக்கும் என்பது எனக்கு தெரிந்த விஷயமே(அந்த அளவுக்கு நீ எனக்கு பாடம் எடுத்திருக்கிறாய்).  நான் நினைத்தது போல உன் பெருமைகளை என்னிடம் சொல்ல வந்தாய்(நான் அப்படி இருக்கேன் அங்க போனோம் இங்க போனோம் என்று).  நானும் அப்படியா என்று கேட்டுவிட்டு போனேன்.

இன்னொன்றையும் நன்றாக தெரிந்து கொள்.  உன்னை விட கடவுள் எனக்கு பல மடங்கு சந்தோஷமான வாழ்க்கையை கொடுத்திருக்கிறார்.  என் அப்பா,அம்மா செய்த புண்ணியமா இல்லை நான் செய்த புண்ணியமா என்று தெரியவில்லை.  வானத்தின் நீளம்  எவ்வளவோ அதை விட பல மடங்கு பாசம் வைத்திருக்கும் என் கணவர்.  கடலின் நீளம் எவ்வளவோ அதை விட பலமடங்கு பெரியதாக என்னுடைய சந்தோஷம், அதையெல்லாம் சொல்லுவதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை.  எனக்கு என்ன கேட்டாலும் கிடைக்கும், கிடைக்காது என்று என் வாழ்வில் இனிமேல் எதுவும் இல்லை.   உன்னைவிட பலமடங்கு வசதியாக வாழ்கிறேன், எனக்கு ஒரு குறையும் கடவுள் வைக்கவில்லை.

நான் எதற்காகவும் உன் முன் கைகட்டி நிற்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.  நீயாக என்னிடம் பல உதவிகள் கேட்டாய், எதையும் எதிர் பார்க்காமல் தான் நான் உனக்கு உதவினேன்.  ஆனால், உன் தேவை முடிந்ததும் என்னை நீ விட்டுவிட்டாய்.  நல்ல வேலை நான் தப்பிச்சேன்.  பாவம் உன்னுடன் உள்ள தோழிகள்...உன்னையும் ஒரு சக மனிஷியாக நினைத்து பழகுகிறார்கள்.....என்று அவர்களுக்கு உன் சுயரூபம் தெரியபோகிறதோ.

உனக்கு கிடைத்த அழகான வாழ்க்கையை உனக்கு பயன்படுத்த தெரியவில்லை...உன் பல்லை நீயே குற்றி நாரடிக்கிறாய்.....நீ செய்த தவறுகளை ஒருமுறை யோசி....அப்புறம் யாரு தவறு செய்தார்கள் என்று பேசு.....

என்னுடைய எல்லா பதிவிலும் உன்னை நீக்கிவிட்டேன்.  எல்லோர் மனமும் ஒரு கண்ணாடிதான்...என்னுடைய கண்ணாடியில் நீ தோழியாக இருந்தாய் நேற்று வரை.  இன்று அதை நீயே உடைத்துவிட்டாய்.  இனி அதில் எள் அளவு கூட உனக்கு இடம் இல்லை.

இந்த பதிவை பார்த்து நீயே என்னை உன் முக புத்தகத்தில் தோழிகள் வரிசையில் இருந்து எடுத்துவிட்டால் இன்னும் சந்தோஷப்படுவேன்.  அப்படி இல்லையென்றால் என்னை பிளாக் செய்துவிட்டால் உனக்கு கோடி புண்ணியம் உண்டாகும்.  நான் செய்தால் உன் கணவருக்கு தேவையில்லாத சந்தேகம் வரும்.  நீயே செய்தால் இப்போது பொய் சொன்னது போல எதாவது ஒரு பொய்யை என் மேல் சுமத்திவிடு உனக்கு எந்த பிரச்சனையும் வராது.

உன்னை பார்க்க கூட எனக்கு புடிக்கவில்லை.  இனியும் என் வாழ்வில் நீ இருந்தால் எனக்கு நிம்மதியே இருக்காது.......தயவு செய்து என்னை விட்டு விலகிவிடு....உனக்கு நம்பிக்கையாக இருக்கும் என்னைப்போல் சிலரை தயவு செய்து ஏமாற்றும் நோக்கத்தில் பழகாதே.....இன்று என்னை  இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இறைவன் அவர்களுக்கும் ஒருநாள் உன்னுடைய சுயரூபதை காட்டிவிடுவான்.  எதற்கும் தயாராகவே இரு அதுதான் உனக்கு நல்லது.

உன்னை நினைத்து 2 நாட்களாக என் நிம்மதியை நான் தொலைத்துவிட்டேன்.

என்னிடம் இருந்து விலகும் முன் கொஞ்சம் என்னுடைய தோழிகளையும் பற்றி தெரிந்துகொள்.    பள்ளியில் படித்த தோழிகள் தங்கமலர், கௌதமி(10வருட தோழி).  என் கல்லூரி தோழி கிருபா(7வருட தோழி).  என் ஆஸ்திரேலியா தோழி நித்தியா இத்தனை பேர் எனக்கு போதும்.  இப்போது இருக்கும் என்னுடைய தோழிகள் எல்லாருமே என்னிடம் அவர்களுடைய தேவைக்காக பழகுபவர்கள் இல்லை. பாசத்திற்காக மட்டுமே பழகுகிறார்கள், என்றைக்குமே வேஷம் காட்ட மாட்டார்கள் என்று தெரியும்.  எனக்கென நான்கு தோழிகள் இருந்தாலே போதும் உண்மையான தோழிகளாய்.

நான் ஏன் அமெரிக்கா வந்தேன் என்று ஆரம்பத்தில் வருத்தப்பட்டேன்.  இப்போது சந்தோஷபடுகிறேன் நல்ல வேலை வந்துட்டேன்னு.  அங்கே இருந்தால் பேசும் நேரம் அதிகம் இருக்கும் நான் இன்னும் ஏமாந்து போயிருப்பேன்.  அப்படியே எனக்கு தெரிஞ்சுருந்தாலும் அய்யய்யோ அப்படின்னு கவலைபட்டிருப்பேன்.  இப்போது வெகுதூரம் தள்ளி வந்ததால் நிம்மதியாக இருக்கிறேன்.  ஏனென்றால் இங்கு வந்ததால் யாரிடமும் பேசுவதற்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை. அதனால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.  இந்த நிமிடத்தில் கடவுளுக்கு நன்றி சொல்லிகொள்கிறேன்.

உன்னக்கு ஒரு டாட்டா ............உன் நடிப்புக்கும் ஒரு டாட்டா .......நான் தெளிஞ்சுட்டேன்  :-/ இது எனக்கு ஒரு அழகான பாடமாக நான் எடுத்துகொள்கிறேன்.

இதோ என் போல் ஏமாறும் சிலருக்காக எழுதபட்ட படம்.  எனக்காகவே எழுதின மாதிரி இருக்கு .....