Thursday, December 13, 2012

படித்தால் மட்டும் போதாது சொல்லில் காட்டுவதை விட செயலில் காட்டுங்கள்



தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு  -  திருக்குறள் 
                                    
                                    இப்படி தினம் ஒரு திருக்குறள் படித்தால் மட்டும் போதாது .. அடுத்தவர்களுக்கு அறிவுரை சொன்னாலும் போதாது,  அதில் நாம் என்ன லட்சணத்தில் இருக்கிறோம், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூற, நாம் முதலில் இதை கடை பிடிகிறோமா, இதை பற்றி பேசுவதற்கு என எல்லா விஷயங்களிலும் சிந்தித்து பார்த்து பேச வேண்டும் . நமக்கு தான் பேச தெரியும் என இஷ்டத்திற்கு பேசுபவர்கள் . திருக்குறள் வரிகளை பின் பற்றுபவர்களாக இருக்க மாட்டார்கள் . எனவே, திருக்குறளை பின்பற்றுபவர்கள் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதை விட்டுவிட்டு, அதை பின் பற்றுவதில்  நாம் சிறந்தவர்களாக இருக்கிறோமா என்று முதலில் யோசித்து பார்த்து , பின்பு  அறிவுரை சொல்ல வேண்டும். என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் ..... இதை ஏன் கூறுகிறேன் என்றால், சிலர் திருக்குறளின்  வார்த்தைகளை இனிமையாக பேசுவார்கள். அதை பற்றி நாம் ஆச்சர்யம் படும் அளவுக்கு பேசுவார்கள்  ஆனால், அதை கொஞ்சம் கூட செயலில் காட்ட மாட்டார்கள். எனவே , இனிமேல் ஆவது இதே தவறை செய்யாமல் திருந்துங்கள் என கூறுகிறேன். அப்படி இல்லை என்றால் திருக்குறளை பற்றி யாரிடமும் உங்கள் பெருமையை  காட்டாதீர்கள். நீங்கள் பேசும்போது அதை கேட்கிறவர்கள் உங்களை பற்றி நன்கு அறிந்தவர்களாக இருந்தால், உங்களையே திருப்பி அந்த கேள்விக்கு பதில் கேட்டால் அவமானப்பட்டு நிற்காதீர்கள். திருந்துங்கள் இல்லையேல் இனியாவது திருத்தி கொள்ளுங்கள் .....

Monday, December 3, 2012

தீர்வு

தீர்வு

                                                                                                  
                                                       
               தீர்வு என்பது ஒரு சில தேவைக்காக நாம் தேடும் முடிவாக இருக்கலாம்.... அதை , முடிவு என்றும் எளிதாக சொல்லி முடித்து விட முடியாது...... எதற்கும், என்றும் முடிவு என்பது இந்த உலகில் கிடையாது..... இந்த உலகிற்கும் , நமக்கும் உள்ள உறவு முடியும் வரை ஏதாவது ஒரு தேடல் ,தேவை இருக்கும் , அதற்கான முடிவு என்றும்  நம்மை சுற்றி , சுற்றி வந்து கொண்டே தான் இருக்கும் .... ஆனால்  அது கிடைப்பது ஒன்றும் அவ்வளவு எளிது அல்ல ... அது நம்மை சார்ந்தவர்களிடம் தான் அதிகம் இருக்கும் .... அப்படி இருப்பதால் ,அது அதை விட பெரிய கொடுமை ஏதும் இல்லை  ....  அவர்களிடம் அதற்க்கான தீர்வை நாம் கேட்பதற்கு , கேட்காமலே இருந்து விடலாமோ  என்று கூட  சில சமயங்களில் தோன்றுவது உண்டு .... அவர்கள் முடிவில் அவர்கள் தெளிவாக இருந்தால் நமக்கு முடிவு கிடைப்பது மிகவும் கடினம் ... ஏன் என்றால்  ! அதை சொல்லி புரிய வைக்கலாம் என்று நினைத்து சொன்னால், அப்படியும் புரியவில்லை என்று தெரிந்தால் ....நாம் அவர்களுக்கு எவ்வளவு புரிய வைத்தாலும் புரிந்தும் புரியாதது போல நம்மிடம் பேசினால் ....அவர்களுக்கு அதில் வேறு ஒரு எண்ணமும் (கருத்தும்), வேறு முடிவும் மனதில் எண்ணி இருந்தால் ...நாம் தேடிய அந்த முடிவு எளிதாக கிடைப்பது என்பது சாத்தியம் இல்லை ....சரி , சொன்னால் என்னதான் நடக்கிறது பார்போம்  என்று சொன்னால்.... அதற்க்கு தேவையான பாதி தீர்வு  கிடைத்தால் கூட  மகிழ்ச்சி தான் ....ஆனால் நாம் எதிர் பார்த்ததற்க்கு  எதிராக இருந்தால் நாம் தேடும் அந்த தேடல் பாதிலே  நின்று விடும்... நமக்கே அதன் மேல்  ஒரு வித வெறுப்பும்  வந்துவிடும் ... அதற்க்கு மேல் சொல்வதை விட்டு  விட்டு வேறு வேலையை பார்க்க வேண்டியது  தான் ....இது என்றும் முடிந்து விடாது .....மறுபடியும் ஒரு நாள் அது நம்மை தேடிவரும் .... அது வரை காத்திருக்க வேண்டும் ...அப்போதும் முடிவு கிடைக்கும் என்பது சந்தேகம் தான் .................... அதனால் அதை சார்ந்தவர்களிடம் மனம் விட்டு பேசினால் முடிவு கிடைக்கலாம்... மனம் விட்டு பேசினால் எந்த ஒரு தேவைக்கும் முடிவு கிடைக்கும்....... 
                                                

                                       ........****..........~~~~````............****.......

Sunday, December 2, 2012

அம்மா



அம்மா!
நான் உன்னை தேடுறேன் ,
உன்னை பாக்கணும் , 
உன் கூட பேசனும் ,
அதுக்கு கூட நான் இப்போது அனுமதி வாங்க வேண்டி இருக்கிறது . என் மனது வலிக்கிறது உன்னிடம் சில பாரங்களை சொல்லி குறைக்கலாம் என நான் நினைகிறேன் ....
அது நடக்குமா சொல்லுமா.....

இப்படிக்கு ,
உன் பிள்ளை !!!......