Monday, August 30, 2021

கிருஷ்ண ஜெயந்தி

ஹரே கிருஷ்ணா ❤️

ஒரு கண்ணனை கரம் பிடித்தேன் 
இன்னும் மூன்று கண்ணனை எனக்காக அனுப்பி வைத்தாய்‌....

இன்று ஒன்றல்ல நான்கும் என் சொல் கேட்பதில்லை... இப்படியே போனால் என்றாவது ஒரு நாள் நான்கு பேரையும்... உரலில் உன்னை கட்டி போட்டது போல இவர்களையும் கட்டி போட்டு விடுவேன் 🤣 சொல்லிவை அவர்களிடம் 🤣🤣🤣🤣

எல்லா நாளும் பார்த்து கொண்டே இருக்கமாட்டேன்.  இந்த 4 பேருக்கும் நல்ல புத்தியை கொடு கண்ணா🤣🤣🤣🙏🙏🙏🙏

Monday, July 8, 2019

மனிதனின் மனம் ஒரு குரங்கு

மனிதன் தன்னுடைய சுயநலத்திற்காக தன்னை நம்பி இருப்பவர்களை எளிதாக ஏமாற்றி விடுகிறான் காரணம் மனதால் எத்தனை காயம் பட்டாலும் தன்னை விட்டு எங்கும் போகமுடியாது என்ற தன்னம்பிக்கை.

Wednesday, October 17, 2018

ஜாதகம்

                                                                   ஜாதகம்

ஒரு காகிதத்தில் உள்ள கட்டங்களை வைத்து நம் வாழ்க்கையை யாராலும் நிர்ணயிக்க முடியாது. அப்படி யாரேனும் கூறினால் தயவு செய்து நம்பாதீர்கள், நீங்கள் என்று நம்ப ஆரம்பிக்கிறீர்களோ  அதோடு உங்கள் வாழ்க்கை முடிந்தது என்று நினைங்கள்.

எந்த ஜாதகமும் உங்களுக்கு சோறு போடாது
எந்த ஜாதகமும் உங்கள் வாழ்க்கையை வாழாது
எந்த ஜாதகமும் உங்கள் துக்கத்தை சரி செய்யாது
எந்த ஜாதகமும் உங்கள் தலையெழுத்தை மாற்றாது
எந்த ஜாதகமும் உங்களுக்கு நிம்மதி வாங்கி தராது

      இதுதான் என்று உங்கள் தலையில் என்ன எழுதிருக்கோ அது தான் நடக்கும் இடையில் எங்கிருந்து வருகிறது ஜாதக பொருத்தம், தோஷம் எல்லாம். 

     உங்களுக்கு ஏதும் சந்தேகம் என்றால் நீங்கள் உங்கள் ராசி, நட்க்ஷத்திரம் மட்டும் பார்த்து குருபெயர்ச்சி பார்த்தாலே எல்லாம் சொல்லிவிடுகிறார்கள் இதில் தனியாக ஜாதகம் பார்த்தால் நம் பணம் அனைத்தும் வாங்குவதற்கு அடிபோடுகிறார்கள்.

தயவு செய்து ஜாதகம் பார்ப்பதை விட்டுவிட்டு டிவியில் தினமும் சொல்லும் ராசி பலன் அல்லது குருபெயர்ச்சி பலன் மட்டும் பார்த்தாலே போதும். நீங்களும் நிம்மதியாக இருக்கலாம் உங்கள் பணமும் வீணாகாது என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன்.

போனவாரம் குருபெயர்ச்சி பலன் பற்றி வேந்தர் டீவியில் ஒரு நிகழ்ச்சி நடந்தது அதில் நடுவராக இருந்த அனைவரும் தெளிவாக சிறப்பாக சொன்னார்கள். அப்போது தன் புரிந்தது, வீட்டில் நிம்மதி இல்லை, குடும்ப உறுப்பினர்களுக்கு உடல்நிலை சரி இல்லை என்று ஜாதகம் பார்ப்பது தவறு. வருடம் ஒரு முறை குருபெயர்ச்சி டீவியில் பார்த்தாலே போதும்.

Monday, October 15, 2018

சாகும் நாள் தெரிந்துவிட்டால் வாழும் நாள் நரகமாகி விடும்

         "சாகும்  நாள் தெரிந்துவிட்டால்  வாழும் நாள் நரகமாகி விடும் "

எவன் ஒருவனுக்கு சாகும் நாள் தெரிகிறதோ அவன் அனுபவிக்கும் நரக வேதனையை  வேறு எவராலும் உணர முடியாது. 


Monday, November 16, 2015

தூங்காவனம் விமர்சனம்

வெகுநாள் கழித்து முதல் நாள் முதல் ஷோ என்று போய் பார்த்த படம் தூங்காவனம். பொதுவாக 1 வாரத்திற்குள் போவோம் இல்லையேல் 2வது ஷோ 3வது ஷோ என்று போவோம்.  இந்த முறை படம் trailer கூட பார்க்காமல் தான் படம் பார்க்க சென்றேன் படம் செமையா இருந்துச்சு.  நான் கூருவது என்னுடைய் கருத்து. பிடிச்சா படிங்க பிடிக்காட்டி ஸ்கிப் பண்ணிட்டு போயிகிட்டே இருங்க என்ன நான் சொல்லுறது :P

ஆரம்பமே அதிரடியா அராம்பம் ஆகுது.  கமலஹாசன் சார் முதலிலே வந்துடுறார். படத்தோட மொத்த கதைய 4 வரில சொல்லனும்ன்னா. போலிஸ் போதை மருந்து கடத்துற கும்பல்கிட்ட இருந்து, ஒரு பை போதை பொடி உள்ள பையை எடுத்துடுறாங்க( போலிஸ் மாதிரி இல்லாம கொள்ளைகாரன் வேஷம் போட்டு) . அதை வாங்க அந்த ரவுடி கும்பல் போலிசோட பையனை கடத்தி வச்சிட்டு, பையை கொடுத்துட்டு பையனை கூடிட்டு போன்னு சொல்லுது. அந்த போலிஸ் எப்படி அந்த பையை கொடுக்குறாரு அப்புறம் அவர் பையனை எப்படியெல்லாம் போராடி கூட்டிட்டு போறாரு இதாங்க கதை. ரொம்ப முக்கியமான ஒன்னு படத்துல பாடலே இல்லைங்க அதான் மெயின். கடைசியா ஒரு பாட்டு படம் முடிஞ்ச அப்புறம் அது சூப்பர் :)

<<<<<<<<<<<<<<< கொஞ்சம் விளக்கமா கதைக்கு போகலாமா >>>>>>>>>>>>>>>

ஹீரோ நம்ம கமலஹாசன் சார், எடுத்ததும் அவரும், அவரோட நண்பரும் ரவுடி கும்பலை மெரட்டி அதுல உள்ள போதை மருந்து எடுத்துட்டு போறாங்க.

அப்போ கமலஹாசன் சார் வயித்துல ஒருத்தன் கத்தி வச்சி கீரிடுறான், அவர் அதோட அந்த படம் முடியிற வரை அதையும் ஒரு பாயிண்டா வச்சிருகாரு படத்துல.  பணத்துக்காக அவர் போதை மருந்தை கடத்துற மாதிரி காட்டிருப்பாங்க.  இந்த படத்துல அவருக்கு டிவோர்ஸ் ஆகிருது.  அவர் பையனும் அவரும் தனி வீட்டுல இருக்குறாங்க, அவன் அவங்க அம்மா கூட வார கடைசில 2 நாள் இருக்கிறான்.  போதை மருந்து கடத்தின கும்பல் பையனை கடதிடுறாங்க. அப்பப்போ சின்ன சின்ன கமெடி எல்லாம் வருது, அழகா ரசிக்கிற மாதிரி.  திரிஷா அந்த போதை மருந்து திருடு போன இடத்துக்கு வந்து சர்ச் பண்ணுறாங்க. அப்போ தான் அவங்களும் போலீஸ் அப்படின்னு தெரியுது. அதுவும் அவங்க கமல் சார் நல்ல போலீஸ் அதனால தான் நானும் போலீஸ் வேலைக்கு வந்தேன்னு படம் முழுக்க அப்பப்போ நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லுவாங்க.  முக்கியமான வில்லன் பிரகாஷ் ராஜ் சார் (போதை மருந்து வில்லன்) , கிஷோர் சார் (போலீஸ் ல இருக்குற போதை மருந்து வில்லன்)  கமல் சார் மனைவி ஆஷா சரத், அவங்க அப்பபோ பையனை எங்க? ஏன் பையன் இன்னும் வீட்டுக்கு போகலை, போன் பேசலை? . அவன் எங்க என்ன ஏதுன்னு கமல் சார் கிட்ட கேட்கும் போது அவர் அவன் வருவான் நீ போ என்று சொல்லிவிட்டு அவர் வேலையை பார்ப்பார். அப்போ ஒரு போன்கால் வரும் (உங்களுக்கு தெரியாததா பையன் காணாம போயிருக்கான் போன் வந்தா என்ன அர்த்தம் :P )  உங்கள் பையன் எங்க கைல பையை கொடுத்துட்டு பையனை கூட்டிவிட்டு போ என பிரகாஷ்ராஜ் சொல்லுவார்.  அப்போது அவரும் சரி என்று சொல்லிவிட்டு, பையை எடுத்துவிட்டு போவார்.  கமலுடைய தோழர் கிஷோருக்கு போன் பண்ணி அனைத்தையும் சொல்ல, அவர் அந்த பையை எடுக்க திரிஷாவை அனுப்புவார். திரிஷாக்கு ஏதும் தெரியாது, ஆனால் கமல் பின்னாலேயே போய்  அவர் வைத்த இடத்திலிருந்து இவர் எடுத்து  அது என்ன என்று பார்க்கும் போது போதை மருந்து என்று தெரிய வர, இது எதுக்கு இவ்ளோ இருக்கு என்ற கேள்வியை கிஷோரிடம் போனில் கேட்டு சண்டை போட்டுவிட்டு ஒளித்துவைத்து விடுவார். பையனை கூட்டிவிட்டு வரவதற்காக, ஒரு பாக்கெட் போதை மருந்தை அடையாளத்துக்கு எடுத்து கொண்டு போய் காட்டிவிட்டு பையனை அனுப்பு நான் பையை தருகிறேன் என்று சொல்ல. அவர் பையை கொடுத்து விட்டு பையனை கூட்டிவிட்டு போ என்று சொல்லுவார். படம் முழுக்க பப்புக்கு உள்ளேயே தான் நடக்கும்.  பப்பென்றால் இப்படிதான் இருக்கோமோ என்கிற மாதிரி எனக்கு ஒரு கேள்வி :P (ஏன்னா நானு முன்ன பின்ன பப்பை கண்ணால கூட பார்த்ததில்லைங்கோ நம்புங்க :P ) .பையை திரிஷா எடுத்து மறைத்து வைத்ததால் என்ன பண்ண என்று தெரியாமல். அதே போல மைதா மாவு வைத்து பிரகாஷ்ராஜிடம் கொடுக்கிறார்.  அதை கொஞ்சம் தாமதமாக கண்டு பிடிகிறார்கள்.  கமல் படத்தில் முத்தக்காட்சி இல்லையா என்று யாரும் கேட்க்க கூடாது. அதற்க்காக ஒரு பெண் அந்த படத்தில் இருந்தாள். முத்தத்திற்கு மட்டும் தான் :P.  பையனை அவர் கூட்டி கொண்டு போகும் போது தான் அது மாவு என்று கண்டு பிடித்து. மறுபடியும் அவனை கமல் சாரிடம் அவரிடம் இருந்து பிரித்து வைகிறார்கள். படத்தில் அடுத்து என்ன அடுத்து என்ன என்பது போல விறுவிறுப்பாக போனது. அடிபட்ட கமலுக்கு காயம் ஆறும்முன்பே பையனை தேடும் வேலை வந்ததும் அந்த வலியுடன் எப்படியெல்லாம் போராடி பையனை கை பிடிக்கிறார் என்பது தான் கதை.  ஒரு நாள் இரவு முழுவதும் பப்பில் நடக்கும் கதை இது. காலையில் பையனை ஒரு வழியாக அம்மா வீட்டில் கொண்டுபோய் வாசலில் விட்டு விட்டு மயக்கம் போட்டு உள்ளேயே விழுந்திருப்பார்.  அதை பார்த்த அவரது பையன் காரை அவனே ஓட்டி அருகில் உள்ள மருந்துவமனையில் அவரை சேர்த்து விட்டு அமர்ந்திருக்கும் போது, பப்பில் கமல் சந்தித்த பெண் அங்கு தான் நர்சாக பணிபுரிகிறாள். அவள் வந்து உன் அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது என்று ஓரிரு வார்தைகள் ஆறுதலாய் பேசிவிட்டு போக.  அடுத்து த்ரிஷா வந்து அதே போல சொல்லிவிட்டு போக.  பையன் விவரமாய் அம்மாவுக்கு போன் செய்து நீ உடனே மருத்துவமனைக்கு வா என்று சொல்லுவான்.  அம்மாவோ அங்க உள்ளவங்க பார்த்துபாங்கடா நான் வரலை என்று சொன்னதும்.  பையன் கொஞ்சம் அழுத்தமாக, இங்க உள்ளவங்க நல்லா பார்த்துகிறதாலதாம்மா உன்னைய கூப்பிடுரேன்னு பையன் சொன்னதும் அம்மா திருதிருவென்று முளிப்பதோடு படம் முடிவடைகிறது :P . 

Monday, November 9, 2015

படத்தின் விமர்சனம்

வணக்கம் மக்களே,

பொதுவாக ஒரு கருத்து சொல்லிவிட்டு படத்தை பற்றி சொல்லுகிறேன்.  எந்த படம் வெளிவந்ததும் யாரும் இது அந்த படத்தோட ரீமேக், இந்த படத்தோட ரீமேக், டப்பிங் என்று முதலில் சொல்லுவது மட்டும் அல்ல, அந்த படத்துல அவன் நடிச்சதை இவன் அப்படியே பார்த்து நடிச்சான், அவன் நல்லா நடிச்சான் இவன் அந்தளுவுக்கு இல்லை என்று எல்லாம் சொல்லி, படம் பார்க்க போகிற யாருடைய மனசையும் கெடுக்காதீர்கள், நீங்கள் தெலுங்கில் பார்த்தீர்களா, மலையாளத்தில் பார்த்தீர்களா, ஏன் சீன மொழி, கொரியன் மொழி, ஆங்கீல படம் என எத்தனை மொழிகளில் படம் பார்த்தாலும் நீ எந்த மொழி காரனோ அந்த மொழியில் உன் படத்தை பார்த்து அதை முதலில் ரசி. அடுத்த மொழியில் உள்ள படம் பிடித்திருகிறதா அதையும் ரசி ஆனால் எதையும் ஒப்பிடாதே. இது போல் ஒரு படம் நம் மொழியில் இல்லையே என்று வறுத்தபடுகிறாயா! நல்லது, அவனை போல் இவன் நடிக்கவில்லை என்று சொல்லாதே. இந்த படத்திற்கு தேவையான நடிப்பை நடித்திருகிறார்களா என்று மட்டும் பார்.  ஏன் இவ்வவளவு சொல்லுகிறேன் என்றால். இன்று படம் பார்க்க சென்றிருந்த போது என் கணவரின் தோழர் ஒருவரை சந்தித்தோம், அவர் எங்களுக்கு பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்திருந்தார். நாங்கள் சந்தித்தது எதார்த்தமாய். அப்போது அவர் சொன்னார் இது அயல் நாட்டு படம் (எந்த நாடு என்று மறந்துவிட்டது :P ) அதை ரீமேக் செய்திருக்கிறார்கள் என்று சொன்னார். வேறு ஒன்றும் அவர் சொல்லவில்லை.  பொதுவாக மற்றவர்களாக இருந்திருந்தால் இன்னும் சொல்லியிருப்பார்கள். அதான் இந்த முறை இதை பற்றி நானே சொல்ல வேண்டும் என்று எழுதினேன். ஒருவன் படம் பார்க்க போனால் படத்தில் உனக்கு பிடித்தது பிடிக்காது எல்லாம் பகிர்ந்து கொள்,  அடுத்த மொழியில் நடித்தவனை பற்றியோ இல்லை அந்த மொழியின் கதை தான் இது என்றோ இழிவாக பேசாதே. அந்த மொழியில் பார்க்காத மக்கள் நம் மொழியில் பார்த்துவிட்டு போகட்டுமே ஏன் நீயே ஆரம்பத்திலே எல்லாத்தையும் பேசுகிறாய். இனிமேலாவது நாம் நம் மொழியில் வரும் படத்தை பார்த்துவிட்டு அந்த கதைக்கு அந்த நடிப்பு எல்லாம் சரியா என விமர்சிப்போம் நன்றி :) 

Wednesday, March 18, 2015

இராஜதந்திரம் ( Rajathandhiram )

                        இராஜதந்திரம்
http://en.wikipedia.org/wiki/Rajathandhiram
Directed byA. G. Amid
Produced bySenthil Veeraasamy
StarringVeera
Regina Cassandra
Pattiyal K. Shekar
Music bySandeep Chowta
Edited byPraveen Antony
Production
company
Sunland Cinemas
White Bucket Productions
Distributed byFox Star Studios
Release dates
  • 13 March 2015
Running time
135 minutes
CountryIndia
LanguageTamil    
மேல உள்ளது எல்லாம் wikipedia ல நான் சுட்டது தான் :P 
கதைக்கு போலாமா.

A. G. Amid இவர் எத்தனை படம் எடுத்தாருன்னு எனக்கு தெரியாது ஆனா இந்த படத்தை பக்காவா நல்லா எடுத்துருக்காரு. செம காமெடி movie, இண்டரஸ்டிங் movie. நான் இந்த படம் trailer பார்த்துட்டு போகவா என்னனு யோசிச்சேன். தியேட்டர் பக்கம் போய் ரொம்ப நாளாச்சுன்னு தான் போனேன். படம் பார்க்க உட்காந்ததும். என் புஜ்ஜுமா சொன்ன முதல் விஷயம் படம் நல்லா இல்லைனா என்னை ஒன்னும் சொல்ல கூடாது.  அதுக்கு நான் garenty இல்லைன்னு. 

நடிகர்கள் எல்லாரும் புதுசு தான். முக்கியமா அந்த மூணு பேருமே புது முகம் தான் ஹீரோ + நண்பர்கள்.  ஓவர் ஆக்டிங் பண்ணாம அசால்ட்டா நடிச்சிருகாங்கப்பா நம்ம ஹீரோக்கள். ஹீரோ வோட நண்பர் செமையா காமெடி பண்ணுறார்பா. அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. அவர் என்ன பண்ணினாலும் காமெடியா போகுது. அது அவரோட நடிப்பாலன்னு கூட சொல்லலாம். 

Amway : இதாலதாங்க நம்ம  தான் ஹீரோ heroine ஒருத்தர் ஒர்த்தர் பேசிக்கிறாங்க. சும்மா சொல்ல கூடாதுங்க படத்தை எடுத்தவருக்கு amway யால பயங்கரமா எங்கையோ அடிவிளுந்துருக்கும்ன்னு நினைக்கிறேன். எனக்கே அந்த அனுபவம் இருக்கு அவருக்கு இருக்காதா. Amway அப்படின்னு வர்ற சப்ஜெக்ட் எப்பவும் போல படம் தொடக்கத்துக்கு அவங்க போடுற பிள்ளையார் சுழிதான். 

இப்போ வர்ற படத்துல எல்லாம் ஹீரோயினுக்கு எங்க சார் கதை இருக்கு. அதே தான் இந்த படத்துலையும்  ஹீரோயின் சும்மா கதைல ஹீரோக்கு ஜோடி வேணுமேன்னு. ஹீரோயின் அப்பா சின்ன குழந்தையா இவங்க இருக்கும் போது ஒரு சிட்பன்ட்ல பணம் போட்டு ஏமாந்து தற்கொலை பண்ணிடுராறு.  அதனால ஹீரோயின் Amway நம்பி வேலை பார்க்காங்க Gold,Silver, Daimond.  அவ்ளோதான் ஹீரோயின் கதை.

சின்ன சின்னதா ஆட்டைய போட்டு பொழப்ப நடத்துற நம்ம ஹீரோகிட்ட பெருசா ஒரு நகை கடைய ஆட்டைய போட்டு செட்டில் ஆகுற ஆசையை காட்டுறாங்க. அவர் அதெல்லாம் முடியாதுன்னு போரார், ஏன்? அப்படின்னு பார்த்தா  அதை செய்ய சொல்லுறது பிளாஷ் பேக்ல சிட்பண்ட் வச்சு மக்களை ஏமாத்தினவர்னு அவர் சொல்லி அவரோட சண்டை போடுறார். சிட்பண்ட் காரரும் ஹீரோவும் ஒருத்தரை ஒருத்தர் மோதிகிறாங்க.  கோவத்துல ஹீரோ கடைய கொள்ளை அடிக்கிறதை கடையோட ஓனர் கிட்டயே போய் சொல்ல.  அவர் பிளானுக்கு சொந்தக்காரரை ஆள் வச்சு கொள்ள அனுபிடுராறு. அடிபட்டவரு மருத்துவமனைல இருக்கும் போது நகை கடைகாரர் நடந்தெல்லாம் வந்து சொல்லிட்டு மிரட்டிட்டு போறாரு. இதுக்கு இடைல ஹீரோவ இன்னொரு ரௌடி கும்பள் தொரத்துது. 

ஹீரோ ஏமாத்து வேலை செஞ்சுதான் பணம் சம்பதிக்கிராறு அப்படின்னு ஹீரோயினுக்கு தெரிஞ்சதும். ஹீரோ வீட்டுல வந்து சண்டை போடுறாங்க. அந்த சமயத்துல ஹீரோ போய் நகை கடைக்காரன் வந்து சொன்னது எல்லாம் சொல்லிட்டு. சிட்பண்ட்ல இவர் ஏமாத்தலை இவர்தான் நகைக்கடைகாரன் ஏமாத்தினான். அதான் நாங்க கொள்ளை அடிக்க சொல்லி பிளான் கொடுத்தோம்ன்னு சொன்னதும்.  ஹீரோயின் மனசுல அவர் சிட்பண்ட்காரர் பத்தி மனசுல போட்ட தப்பான எண்ணம் எல்லாம் நினைச்சு அழுதுட்டு ஹீரோக்கு புத்தி சொல்லிட்டு போனாங்க.

இதையெல்லாம் நினைச்சு ஹீரோ சிட்பண்ட்காரருக்கு நல்லது பண்ணும்னு நினைச்சு. அதே நகை கடைக்காரன்கிட்ட உங்க கடைய கொள்ளை அடிக்க போறோம்ன்னு சொல்லி. அவர் சம்மதத்தோட எலி, பொறி, வடைன்னு சொல்லி அவர் கடைய ஆட்டைய போட்டு. போலீஸ் எல்லாத்துலையும் அவர்தான் அவர் கடைய கொள்ளை அடிக்க சொன்னதுன்னு நம்ப வைக்கிறாரு ஹீரோ. அதோட தன்னை தொரத்திக்கிட்டு வந்த வில்லனையும் அதே கேசுல அழகா கோர்த்துவிட்டுடுராறு அதான் படம். 

மொத்ததுல படம் முழுக்க நல்லா காமெடியாவும் தேவையான இடத்துல சீரியஸும் அருமையா கொடுத்துருக்காங்க நம்ம டைரக்டர்.  செம படம். ஆனா trailerல உள்ளது நிறைய படத்துல இல்லை. அதனால நானும் கொஞ்சம் குழம்பினேன். படம் போய் தியேட்டர்ல பாருங்க அருமையா இருக்கும்.... bye