Wednesday, March 27, 2013

ஐ லவ் யூ அப்பா



ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது..
கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை.
வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்
பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.

வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்

அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்
" ஐ லவ் யூ அப்பா".

மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!!
எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ?

--படித்ததில் பிடித்தது

குழந்தையின் சிரிப்பு

குழந்தையின் சிரிப்பில் நஞ்சு இல்லை பரிசுத்தமானது 
அதுபோல தான் 
குழந்தையின் மனதும் 
தூய்மையானது, பரிசுத்தமானது யாருக்கும் எந்த கேடும் நினைப்பதில்லை 
குழந்தை சிரிப்பதால் யாருக்கும் கேடு இல்லை மாறாக 
குழந்தை சிரித்தால் நமக்கும் சந்தோஷம் தான் வரும் ....

இல்லறம் நல்லறமாக இருக்கும் ....... 

குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம் :)
 

Sunday, March 17, 2013

"மனிதன் தேடுகிறான்!"

                                       

மனம்
விசித்திரமானதுதான்
விலக விலகத்தான்
ஆசைப்படுகிறது..  

மரணத்தின் சுவாசத்திலும்
ஏனோ மயங்குகிறது
எதையோ கேட்கிறது
எதற்காகவோ ஆசைப்படுகிறது..

இறுதி யாத்திரையின்
முடிவான அசைவிலும்
அந்தக் கண்கள்
கனவைச் சுமக்கின்றனவே…

ஏன் தெரியுமா?
"மனிதன் தேடுகிறான்!"

இரை தேடும் இந்த  பறவையை போல!!!!

Manam
Visithiramaanadhu dhaan
Vilaga Vilagadhaan
Aasai padugiradhu...

Maranathin Suvasathilum
Yeno Mayanguhiradhu
Edhaiyo Ketkiradhu
Edharkkagavo Aasaipaduhiradhu .....

Irudhi Yathirain
Mudivaana Asaivilum
Andha Kangal
Kanavaich Sumakindranave....

Yen theriuma?
"Manidhan Theduhiraan!"

Irai thedum indha paravai pola!!!!