அன்பா பேசுறவங்க எல்லோர் மனசிலையும்
அன்பு இருக்காது ஆனால் உரிமையோட
சண்ட போட்டு கோப படுறவங்க மனசில
ஆழமான அன்பு அழியாம இருக்கும்..
Wednesday, January 9, 2013
Tuesday, January 8, 2013
காதலா, நட்பா?
காதலா, நட்பா?
ஷேக்ஸ்பியர்: ஒரு ஆணும் பெண்ணும் ஒரு போதும் நண்பர்களாக இருக்கமுடியாது.
லிங்கன்: ஆண், பெண் நட்பு என்பது காதலுக்கான முதல் படி.
வோர்ட்ஸ் வொர்த்: நண்பர்களாக இருப்போம் என்று ஒரு பெண்ணோ அல்லது ஆணோ சொல்வது என்பது மறைமுகமாக உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்வதாகும்.
ஜாக்கி சான்: காதல் என்பது எப்போதும் பிரியாத நட்பு.
பிக்காசோ: ஒருவர் உங்களுடைய சிறந்த நண்பராக இருந்தால் பிறகு அவரோ அல்லது அவளோ எளிதில் உங்கள் வாழ்க்கைத் துணையாக வந்துவிடுவார்.

தனிமையின் வெறுமை
எத்தனையோ உறவுகள்
என்னை சுற்றி. . !
எத்தனையோ இரவுகள்
யாரும் இன்றி. . !
ஏனோ நீ இல்லாதது மட்டும்
என்னையும் சேர்த்து
நான் உன்னிடம் தொலைந்ததை
உணர்த்துகிறது. . !
தனிமையின் வெறுமையை தவிப்பின்
வேண்டுதலை.
நீ என்னுடன்.......
நீ என்னுடன்.......
எப்போது நீ என்னுடன் இருந்தாய்
இப்போது என்னை விட்டு செல்வதற்கு?
பணம் தேட அயல் நாடு...
வீட்டில் இருக்கும்போது
நண்பர்கள், உறவினர்கள்,
தோட்டம், இயற்கை,
ஓவியம், புத்தகம்,
கண்காட்சி, என்று எத்தனை எத்தனையோ
காட்சிகளும் சம்பவங்களும் உனக்கு......
இதில்
என்னை நினைக்க உனக்கு ஏது நேரம்?
வாழ்ந்தோம், வாழ்கிறோம், வாழ்வோம்,
வாழாமலே வாழ்ந்து கொண்டு......
கணவன் மனைவியாக.....
இதில் நல்ல ஜோடி பொருத்தம்
என்ற விருதுகளையும் வாங்கிக் கொண்டு.....
எப்போது நீ என்னுடன் இருந்தாய்
இப்போது என்னை விட்டு செல்வதற்கு?
பணம் தேட அயல் நாடு...
வீட்டில் இருக்கும்போது
நண்பர்கள், உறவினர்கள்,
தோட்டம், இயற்கை,
ஓவியம், புத்தகம்,
கண்காட்சி, என்று எத்தனை எத்தனையோ
காட்சிகளும் சம்பவங்களும் உனக்கு......
இதில்
என்னை நினைக்க உனக்கு ஏது நேரம்?
வாழ்ந்தோம், வாழ்கிறோம், வாழ்வோம்,
வாழாமலே வாழ்ந்து கொண்டு......
கணவன் மனைவியாக.....
இதில் நல்ல ஜோடி பொருத்தம்
என்ற விருதுகளையும் வாங்கிக் கொண்டு.....
காதல்... கல்யாணம்!
காதல்... கல்யாணம்!
ஞானி ஒருவரைப் பார்த்த இளைஞன் கேட்டான், 'காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன?'' அந்த ஞானி அருகே உள்ள பூந்தோட்டத்தைக் காண்பித்து, 'அங்கு சென்று மிக அழகான பூ ஒன்றைப் பறித்து வா'' என்றார். ஆனால், சில நிபந்தனைகளை விதித்தார். ''ஒரு பூவை ஒருமுறை மட்டுமே பறிக்கவேண்டும். அதாவது, ஒரு பூவைப் பறித்துவிட்டால் அதன் பிறகு வேறு பூவைப் பறிக்கக் கூடாது. இன்னொன்று சென்ற வழியே மீண்டும் திரும்ப வரக் கூடாது. அதாவது ஒரு பூவைக் கடந்து சென்றுவிட்டால் பின்னால் வந்து அந்தப்பூவைப் பறிக்கக்கூடாது.''
இளைஞன் சென்று ஒரு பூவை பறித்துக்கொண்டு வந்தான். ஞானி கேட்டார், ''இதுதான் நீ கண்டதிலே மிக அழகான பூவா?''
''இல்லை. இதைவிட அழகான பூக்கள் இருந்தன. பின்னால், அழகான பூக்கள் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சந்தேகத்தில் முதலில் உள்ள பூவைப் பறித்துவிட்டேன். அதன் பின்னர் இதைவிட அழகான பூக்களைப் பார்த்தேன். நீங்கள் விதித்த நிபந்தனைப்படி அதனைப் பறிக்க இயலவில்லை'' என்றான் இளைஞன்.
ஞானி சிரித்துக்கொண்டே சொன்னார் ''இதுதான் காதல்'' என்றவர் இன்னொருபுறம் உள்ள பூந்தோட்டத்தைக் காண்ப
ித்து ''அங்கிருந்து அழகான பூவைப் பறித்து வா. ஆனால், நிபந்தனைகளை மறந்துவிடாதே' என்றார்.
இம்முறையும் இளைஞன் அந்தப் பூந்தோட்டத்துக்குச் சென்று ஒரு பூவைப் பறித்துவந்தான்.
''இதுதான் இந்தத் தோட்டத்தில் நீ பார்த்த அழகான பூவா?'' மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார் ஞானி.
''இல்லை. இதைவிட அழகான பூக்கள் இருந்தன. ஆனால் கடந்த முறை ஏமாந்ததுபோல இந்த முறை ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காக முதலில் கண்ட அழகான பூக்களைப் பறிக்காமல் கடந்து சென்றுவிட்டேன். கடைசியில் இந்தப் பூதான் கிடைத்தது' ஏமாற்றத்துடன் சொன்னான் இளைஞன். புன்னகையுடன் ஞானி சொன்னார்...
''இதுதான் கல்யாணம்!''

Subscribe to:
Comments (Atom)