Saturday, April 13, 2013

உனக்காக காத்திருக்கிறேன்

                 
                             

                                 காத்திருப்பதும் ஒரு சுகம் தான்

அதிலும், உனக்காக காத்திருப்பதை விட பெரிய சுகம்
இந்த உலகில் வேறு ஏதும் இல்லை
என் வாழ்க்கையின் அர்த்தமே உன்னிடத்தில் இருந்து தானே ஆரம்பம்...

அந்த ஆரம்ப கட்டத்தில் இருந்து
நான் காத்துக்கொண்டு தான் இருக்கிறேன் உனக்காக...! 

நம் இருவருக்கும் திருமணம் என்று பேச தொடங்கிய நாட்களில் இருந்து
நானும் காத்துக்கொண்டு தான் இருந்தேன் உன்னை பார்க்க ....!
நீயும் வந்தாய் என்னைப் பார்க்க .....!  
 
எனக்குள் ஏதோ உன்னிடம் சொல்ல முடியாத அளவு ஆனந்தம்
ஆனால், உன்னிடம் என்னால் அதை சொல்ல முடிய வில்லை....
ஏனென்றால், உனக்காக நான் காத்திருப்பது உனக்கே தெரியாதே......!

உனக்கும் எனக்கும் நிச்சயம் செய்த நாளில் இருந்து நான் காத்திருந்தேன்
நீ அழைக்கும் தொலைபேசியின் ஒலியை கேட்க ......
எந்த தொலைபேசி ஒலித்தாலும், நான் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லுவது
நான் தான் எடுத்து பேசுவேன் என்று
அதை கேட்டு என் அம்மா அப்பா சிரிக்காத நாளில்லை......
இம்ம் உன் அழைப்பும் வரவே இல்லை......  :(

ஆனால்,
திருமணத்திற்க்கு முந்தைய நாள் காலையில்....
எப்போதும் போல தொலைபேசி அழைப்பு வந்தது ....
நீ தான் போன் செய்திருந்தாய்....!
உன்னிடம் நான் பேசியது மிக மிக குறைவு என்பதால்
நீ பேசியதை கூட நான் மச்சான் பேசுவதாக நினைத்து
அம்மாவிடம் கொடுக்க போனேன்.....!
நான் தான் கண்ணன் என்று உன் பெயரை சொன்னதும்
எனக்கே ஆச்சர்யம் என்னிடம் பேசுவது  நீ தான என்று.....!
என் அம்மா நான் பேசுகிறேன் என்று சொன்னதும்
நான் தரமாட்டேன் என்று சொல்லி தனியே வந்து பேசினேன்....!
நீயோ என்னிடம் தான் பேசனும் என்று சொன்னாய்....!
நான் நினைத்து கூட பார்காத அளவுக்கு
எனக்கு சந்தோஷ அதிரிச்சி காத்திருந்ததை
நாம் பேசிய அந்த உரையாடலின் போது தான் அறிந்து கொண்டேன்.....!

நான் உன்னிடம் பேசுவதற்காக இவ்வளவு நாள்  காத்திருந்ததால் என்னவோ கடவுள் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தினார் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டேன்..!

அதற்க்கு இடையில் என்றாவது ஒரு நாள் என்னை பார்க்க நீ வருவாய் என்று காத்துக்கொண்டு இருந்தேன்......!
அதனால் வீட்டில் யாரேனும் கதவில் உள்ள
மின்சார மணியை அழுத்தினாலும்  சரி,
கதவை தட்டினாலும் சரி நீதானோ என்று ஓடி வந்து
கதவருகில் இருக்கும் ஜன்னலின் திரையை விளக்கி பார்ப்பேன் .......
அதில் எனக்கு கிடைத்தது வெறும் ஏமாற்றம் மட்டுமே....!

ஏனோ தெரியவில்லை எதிர் பார்த்து கிடைக்கும் சந்தோஷத்தை விட
எதிர் பாராமல் கிடைக்கும் சந்தோஷம் ஏனோ எனக்கு அதிகமாய் பிடிக்கும்.....

அதனால் கூட நடக்காத இந்த (நீ வீட்டிற்க்கு வரும்) விஷயத்தை ஆர்வமாக நான் எதிர் பார்த்திருந்தேனோ என்னவோ....

திருமணதிற்கு 4 நாள் முன் மண்டபம் பார்க்க எல்லாரும் வந்த போது
நீயும் வருவாய் என நினைத்தேன் ஆனால் நீ வரவில்லை
அதிலும் மிஞ்சியது ஏமாற்றம் தான்
உனக்காக நான் காத்திருப்பதும் நன்றாகத் தான் இருந்தது.....

நம் திருமணத்திற்க்கு பிறகு ஒரு மாதம் இருந்து விட்டு
நீயோ வெளிநாடு சென்று விட்டாய்....! 
நானோ விசாவுக்காக காத்துக்கொண்டு இருந்தேன்.....
ஏனென்றால் அது கிடைத்தால் தானே உன்னைக் காண
நான் அங்கே வர முடியும்......!

நான் இங்கு வந்த நான்கு நாட்களில்
மறுபடியும், நீ வேறு ஒரு நாட்டிருக்கு
வேலை விஷயமாக செல்ல வேண்டும் என்று சென்று விட்டாய்.....
வர பதினைந்து நாட்கள் ஆகும் என்று நீ சொன்னாய்....
நானும் உன் வருகைக்காக காத்துக்கொண்டு இருந்தேன்.....
நீயும் வந்தாய் ........

நான் நினைத்துக்கொண்டேன்
இதோடு, உனக்காக நான் காத்திருந்த காலம் எல்லாம் முடிந்தது என்று...!

உன்னை விட்டு நான் தனியாக இருந்த கால கட்டத்திலெல்லாம்
நான் நினைத்தது உன்னை...உன்னை...... உன்னையே மட்டும் தான்...! 

உனக்காக காத்திருந்தாலும் நான் உன்னையே நினைக்கும் பட்சத்தில்
நான் ரொம்பவே சந்தோஷமாக இருந்து வந்தேன்......!
நான் உன்னை பற்றி நினைப்பதில் ஒரு பங்காவது
என்னைப் பற்றி நீ நினைக்க மாட்டாயா என்று எண்ணி
எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொள்வேனடா.....!

உன்னை விட்டு இப்படி அடிக்கடி பிரிந்து...
நான் அவஸ்த்தைப்படுவதை பார்த்து....
அந்த கடவுள் சந்தோஷப்படுகிறாரோ என்னவோ.....
என்னுடன் இப்படி அடிக்கடி விளையாண்டு கொண்டே இருக்கிறார்...!
நான் உன் மீது அதிக அளவு பாசம் வைத்திருக்கிறேனா என்று சோதித்து பார்க்கிறாரா தெரியவில்லையே....!

என் கண் முன்னாடி அந்த கடவுள் வந்து நின்றால்....
நான் ஒன்று மட்டுமே அவரிடம் கேட்பேன்.....
உனக்கு நியாயமே இல்லையா?
ஏன் இப்படி என்னை அடிக்கடி தனிமையிலே தவிக்க வைக்கிறாய் என்று...!

(கடவுளிடம்) நீ தனிமையில் இருந்து பார்....
என் நிலைமை உனக்கு புரியும் என்று சொல்லுவேன்...!

ஆனால்,
அவர் இப்படி தவிக்கவிடவில்லை என்றால்....
நான் உன் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் என்று
எனக்கே தெரியாமல் போயிருக்கும்....!
அதுக்காக அந்த கடவுளுக்கு நன்றி சொல்லிகிறேன்....!

ஆனால்,
போதும் இதுக்கு மேல இந்த மாதிரியான பிரிவு எல்லாம் வேண்டாம்.....
அதை தாங்கும் அளவுக்கு எனக்கு மனமில்லை....!

சரி, அதுதெல்லாம் போகட்டும் 
இது வரை நான் உனக்காக காத்திருந்த காலமெல்லாம் போதும்..... 
இனியும் என்னை இப்படி தனியே தவிக்க விட்டு செல்லாதே...............

சீக்கிரம் வந்துவிடு ........ உனக்காக நான் இங்கே காத்துக்கொண்டே இருக்கிறேன்...........!

                                                                                                                 இப்படிக்கு,
                                                                                                    உன் அன்பு மனைவி      



                                                 

Thursday, April 4, 2013

நாளை வேண்டாம் இன்று மட்டும் போதும்

நேற்று இருந்த இன்பம் இன்று இல்லை
இன்று இருந்த துன்பம் நாளை இல்லை

இதுவும் கடந்து போகும் - பகவத்கீதை

நாளை,நாளை என்று இந்த நாளை என்கிற வார்த்தை மட்டும் ஏன் தொடர்ந்து வருகிறது. எனக்கு புரியவே இல்லை. நாளை என்பதை மட்டும் மனிதன் நினைவில் வைத்தே வாழுகிறான். நாளை என்பதற்க்கு கொடுக்கும் மதிப்பில் பாதி  கூட இன்று என்பதற்கு செலவிட மனிதனுக்கு மனமில்லை.

நாளை பால்காரன் கடன் கொடுக்கணும், பேங்க்ல லோனுக்கு பணம் கெட்டனும், பிள்ளைங்களுக்கு பள்ளி (கல்லூரி ) படிப்புக்கு  பீஸ் கொடுக்கணும், வீட்டு வாடகை, சாப்பாடு செலவு, பண்டிகை செலவு, துணிமணி செலவு, சுற்றுலா செலவு, கல்யாணம் காட்சி செலவு இப்படி சொல்லணும் என்றால் சொல்லிக்கொண்டே போகலாம். மனிதன் சம்பாதிக்கும் பணத்தை கூட நாளைக்கு செலவுக்கு வேண்டும் இன்று பார்த்து செலவு செய்யணும் என்று யோசிக்கிறான்.

ஹ்ம்ம் இதை எல்லாம் யோசிச்சே சிலருக்கு நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் சேருகிறான். இன்றைய தினத்தை மட்டும் நினைத்திருந்தால் இவ்ளோ மனக்கவலை வருமா?....

நாளைய தினத்தை பற்றி யோசிக்கவில்லை என்றால் அந்த பிரெச்சனையோ  அதுக்கடுத்து வருகிறது. இதற்க்கு என்னதான் தீர்வோ.

மொத்தத்தில் இன்று(நடந்து கொண்டிருக்கும் நாள்) என்று சொல்லிக்கொண்டு. நாளை பற்றிய எண்ணம் தான் நம் எல்லோர் மனத்திலும் இருக்கிறது. இன்னைக்கு இருக்கும் கோவம் நாளைக்கு போயிருமா, இன்னைக்கு இருக்கும் சந்தோஷம் நாளைக்கும் நிலைக்குமா, இன்று இருக்கும் பணம் நாளையும் இருக்குமா என்று கேட்டால் யாருக்கும் பதில் சொல்லுவது கொஞ்சம் கடினம் தான்.

பகவத்கீதையில் "இதும் கடந்து போகும்" என்று கிருஷ்ணர் சொன்னது துன்பம் மட்டும் என்று என்னால் எடுத்துகொள்ள முடியவில்லை, ஏன் இன்பமும் கடந்து போகும் என்று தானே இதற்க்கு அர்த்தம்.

நாளை என்று யோசிப்பதே பெரிய துன்பம் தான் அதை யோசிக்காமல் விட்டுவிட்டால் என்றும் இன்பம் தான் என நினைக்கிறேன் தெரியவில்லை. இன்றைய நாளை நல்முறையில் பார்த்து கொள்ளுவதும் நம்முடைய கடமை தானே.

நாளை வேண்டாம் இன்று மட்டும் போதும்.

நாளை இல்லை என்றால் இன்று இல்லை
இன்று இல்லை என்றால் நாளை இல்லை

என்ன வாழ்க்கைடா இது :(

நாளை....நாளை....நாளை.......வேண்டாம்......இன்று......இன்று.....இன்று...

யாரேனும் இதற்க்கு தீர்வு இருந்தால் கூறுங்களேன்.