Monday, October 28, 2013

ராஜா ராணி (Sema dialogues )


படத்தில் உள்ள பெயர்கள்:
  1. ஆர்யா    - ஜான் 
  2. நாசரியா   -  கீர்த்தனா 
  3. நயன்தார - ரெஜினா 
  4. ஜெய்        - சூர்யா 
  5. சந்தானம்  - சாரதி 
  6. சத்தியராஜ் - நயன்தாரவின் அப்பா 

  • நாசரியா : பிரதர் இப்படியே ஏன் என் பின்னாடி சுத்திட்டு இருக்குறீங்க ...........
  • ஆர்யா   : பிரதர்ன்னு சொல்லாதிங்க நைட் எல்லாம் தூக்கமே வரமாடிக்கி ........ 
  • நாசரியா : உண்மைகள் சில நேரம் கசக்கத்தான் செய்யும்           brother.....என்னைக்குமே பொண்ணுங்கதான் பசங்களை தேடி போகணும் ...........பசங்க பொண்ணுங்களை தேடி வர கூடாது......

  • உனக்கு ஊருல எவளாச்சும் தேன்மொழி, கனி மொழின்னு கிடைப்பா.... தேடி தேடி அலஞ்சு லவ் பண்ணு நான் உனக்கு செட்டே ஆக மாட்டேன்....
  • எல்லா நைட்டும்... எனக்காக யாரு இருக்காங்கன்னு நினைச்சாலே பாதி தூக்கம் கெட்டு  போய்டும்...... இப்போ தான் எனக்கு புருஷன் நீ இருக்கல்ல
  • என்னங்க எனக்கு எங்க அப்பாவை பார்த்துலாம் பயம் இல்லைங்க ...I love youங்க 
  • நம்ம life ல ரொம்ப புடிச்சவங்க நம்மளை விட்டு போன நாமளும் போனும்னு ஒன்னும் இல்லை என்னைக்காச்சும் ஒரு நாள் நமக்கு புடிச்ச மாதிரி நம்ம life மாறும்.....எனக்கு மாறிடுச்சு 
  • எல்லாரும் love பண்ணின பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியுமான்னு தெரியலை ஆனா கல்யாணம் பண்ணிகிட்ட பொண்ணை கண்டிப்பா love பண்ணலாம். 
  • ஒன்னு உன் சந்தோஷத்துக்காக வாழனும் இல்லை அவங்க சந்தோஷத்துக்காகவாது வாழனும்...உன் சந்தோஷம் தான் உன் கைல இல்லையேடா அப்புறம் ஏன் அவங்கள கஷ்டபடுத்துற sadist.
  • வாழ்கைல பாதி பேருக்கு புடிச்ச மாதிரி கல்யாணம் நடக்கிறது இல்லை...இருந்தாலும் வாழுறது இல்லையா....உனக்கு எப்போ இந்த life புடிக்குதோ அப்போ இருந்து lifeஅ start பண்ணு.
  • last ஆ ஒன்னு சொல்லுறேன் love க்கு அப்புறம் ஒருத்தன் குடிக்கிறான்னா அது love failure. அதுவும் கல்யாணத்துக்கு அப்புறமும் அவன் குடிக்கானா அவன் lifeஏ failure .
ஆர்யா birthday celebration : (ஆர்யா,2nd person,சந்தானம்)
  • ஆர்யா      : ஏன் வெட்டனும் .....(cake) வெட்டாமலே celebrate பண்ணலாமே மச்சான்......
  • 2nd person : cake அ  வெட்டாம எப்படி சார் சாப்ட முடியும் ....
  • சந்தானம்   : ஏன் சாப்டமுடியாது? ... கரண்டி எடுத்துட்டு வந்து சக்கரை பொங்கல் மாதிரி  வழிச்சு                     வாய்ல போட்டுக்கோடா ......
  • 2nd person : நல்ல ஐடியாவா இருக்கே......இந்தா எடுத்துட்டு வாரேன் ....... 
  • சந்தானம்   : டேய் நில்றா ........இவன் வேற ஒருத்தன்.....  :P 

சத்தியராஜ்,ஆரியா,சந்தானம் :
  • சத்தியராஜ் : ஏன் ஜான் என் பொண்ணு எப்பயாச்சும் உங்களுக்கு பீர் வாங்கி                                                     கொடுத்துருக்காளா 
  • ஆர்யா      : ஏன் uncle?........உங்க பொண்ணு பீர் அடிக்குமா ...
  • சந்தானம்   : ஏன் ஓட்கா அடிச்சா company கொடுக்க வசதியா இருக்குமோன்னு பாக்குறியா
  • சத்தியராஜ் : அது இல்ல சாரதி...... என் பொண்ணுக்கு என்கிட்ட எதாச்சும்                                                        காரியம் ஆகணும்னா beer வாங்கி கொடுத்தது தான் correct பண்ணுவா அதான்                            கேட்டேன்...  
  • சந்தானம்   : நீங்க ஒரு பீரோட நிப்பாடிருவீங்க ......... நம்மாளு அடிக்க ஆரம்பிச்சா ஒரு கேஸ்                       பீரோடல முடிப்பான்.....
நயன்தார,சத்தியராஜ் :
  • நயன்தார    : அப்பா ........
  • சத்தியராஜ் : நீ happy ஆ இருக்கீல?
  • நயன்தார   : எனக்கென்ப்பா சந்தோஷமாத்தான் இருக்கேன்........பாத்தல்ல 
  • சத்தியராஜ் : ஹ்ம்ம்ம்....
  • நயன்தார   : அப்பா ................. 
  • சத்தியராஜ் : நீ எனக்காக நடிக்கிற ஓகே....ஜான் எதுக்காக நடிக்கனும் .....

  • என்னைக்கு என் love அ சொன்னேனோ அப்போ தான் என் life ஏ start ஆச்சு .....என்னைக்கு உன் லவ் அ நீ சொல்லுறியோ அப்போதான் உன் life ஏ ஸ்டார்ட் ஆகும்பா .....சரக்கு எடுத்துகோபா .....
  • சார், நான் சரக்கடிச்சா என் போண்டாடிக்கி புடிக்காது .........
  • ஜான் இன்னைல இருந்து உன் lifeஎ ஸ்டார்ட் ஆகிருச்சு நீ போலாம்பா 

நயன்தார(ரெஜினா),ஆர்யா(ஜான்),ஜெய்(சூர்யா) : climax 

  • நயன்    : சூர்யா சாகலை..... பாஸ்போர்ட் இடத்துல மேல........
  • ஆர்யா: இருங்க நான் போய் பேசுறேன் ........

  • ஆர்யா : நீங்க தான சூர்யா  ....
  •  ஜெய்    : ஆமா நான் தான் ....
  • ஆர்யா : உங்களுக்கு ரெஜினா தெரியும்ல .......customer care ல வொர்க் பண்ணும் போது                            wrong நம்பர்ல ரெஜினாவை friend புடிச்சு லவ் பண்ணி .......அப்புறம் நீங்க US                              போயி..அங்க இருந்து suicide பண்ணிகிட்டதா மிஸ்யூஸ்...... 
  • ஜெய்     : நீ யாரு?
  • ஆர்யா : ஜான் 
  • ஜெய்     : அவங்களுக்கு நீ யாரு சார் ?
  • ஆர்யா : husband ....
  • ஜெய்     : எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு சார் ... ரெஜினா பார்த்ததும்.. ஹாய் ரெஜினா கல்யாணம்                 பண்ணிக்கலாமா ....அப்படின்னு கேக்க சொல்லுறீங்களா .....உங்ககிட்ட                                       சொல்லுறதுக்கு என்ன சார் ...எங்க அப்பா என்ன அடிச்சு தான் ஊருக்கு அனுப்சாரு                  பயந்துட்டே தான் போனேன் ....ஐயையோ லவ் போச்சே....life போச்சேன்னு ...எல்லா                 லவ் failure பின்னாடியும் ஒரு நல்ல life இருக்கும் சார்...நல்ல life தான் இருக்கு ..                         ஒத்துக்குறேன் மிஸ்ஸிங் தான் என்ன பண்ணர்து .... எனக்கு நல்ல தெரியும்                                     அவங்களால என்னை மறக்க முடியாதுன்னு ....அதனால தான் என் friend அ - விட்டே               நான் செத்துட்டேன்னு சொல்ல சொன்னேன்... எல்லாரும் love பண்ணின பொண்ண                     கல்யாணம் பண்ணிக்க முடியுமான்னு தெரியலை ஆனா கல்யாணம் பண்ணிகிட்ட                         பொண்ண கண்டிப்பா love பண்ணலாம் ......
  • ஆர்யா : சார் நான் வேணும்னா உங்க பொண்டாட்டிகிட்ட பேசி பார்க்கட்டுமா 
  • ஜெய்     : போடா ......




வாழ்க்கை ஒரு சாக்கடை

வாழ்க்கை எனக்கு நிறைய பாடம் கற்று தந்திருக்கிறது .......
இன்னும் கற்றுக்கொண்டும் இருக்கிறேன்.....
சில விஷயங்கள் இன்னும் எனக்கு முழுமையாக புலப்படவில்லை....
சில பாடங்கள் நியாயமாகவும்.....
சிலவை அநியாயமாகவும் இருக்கிறது...
சில பாடம் இப்படி தான் இருக்குமா என்று ஆராய்ந்து பார்த்தால்....
இல்லை.....இல்லை இப்படி மாற்றி அமைத்திருக்கிறார்கள் என்று

இப்போது தான் புலப்படுகிறது....
இப்படி அவரவருக்கு தகுந்தாற்போல் சட்டத்தையும்,நியாயத்தையும்
மாற்றி அமைத்தால் பூமி எப்படி தாங்கும்....
இல்லையேல் நாம் தான் எப்படி தாங்குவோம்....
இதை நாம் திருப்பி கேட்டால் திமிரு பிடித்தவர் என்றெல்லாம் பட்டம் கொடுப்பார்கள்...

இதையெல்லாம் ஏற்றுக்கொண்டு இன்னும் எத்தனை காலத்திற்கு
இப்படியே  மனிதர்கள் வாழ முடியும்...எப்படி தான் வாழ போகிறார்களோ...
இதனால் தான் (சாதி,மதம்,இனம்,வீட்டு) கலவரம், சண்டை என்றெல்லாம் உருவாகிறது..

இதற்க்கு என்றுமே தீர்வு கிடையாதா என்றால் கிடையாது........அவர்களாக புரிந்து கொள்ளும்வரை :-/ 
இப்படிபட்ட நிலையில் யாரேனும் நமக்கு உதவியாக இருந்தால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் .....
இல்லையென்றால் நாம் அனாதையாக இருக்கோம் என்கிற உண்மை புலப்பட்டுவிடும் .......

                               கலிகாலம் முற்றிவிட்டது இனி கடவுளுக்கு தான் வெளிச்சம்


                                               

Tuesday, October 22, 2013

காதல் பிரச்சனை

ஆண்களுக்கு மட்டும் தான் காதலின் வலி தெரியுமா என்ன?
பெண்களுக்கு அதை விட தெரியும் .......

என்னமோ கவிதையாக எழுதி தள்ளுகிறார்கள் ...
எங்களுக்கு தான் காதலின் வலி அதிகம் ....
நாங்கள் தான் தனியாக தவிக்கிறோம் என்றெல்லாம் எழுதுகிறார்கள்...

ஒரு காதலன் எழுதும் கவிதையில் அதிகமாக பயன்படுத்தும் வரி....
நீ இல்லையென்றால் செத்து விடுவேன்......
தினமும் தவிக்கிறேன் அழுகிறேன் அன்பே .....
இறுதியாக, தினம் தினம் சாகிறேன் சீக்கிரம் வந்துவிடு.......
இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படியே சொல்லிட்டு இருக்க போகிறார்கள் என்று தெரியவில்லை..

எல்லா பெண்களுக்குள்ளும் காதல் இருக்கிறது!
ஆண்கள் வைக்கும் பாசத்தின் அளவிற்கு பெண்களும் பாசம் வைகிறார்கள் ....
என்ன உங்களால் வெளிப்படையாக எழுத முடியும் ....
பெண்களால் எழுத முடியாது....

ஆண்களை பொறுத்தவரை வீட்டிற்கு தெரிந்தாலும் பிரச்சனை இல்லை...
கட்டிக்க போற பொண்ணுக்கு தெரிஞ்சாலும் பிரச்சனை இல்லை.....
காதலி பற்றி பெருமையான வார்த்தைகளும்,கவிதைகளும்
நடந்த கதைகளும்  மனைவியிடம் சொல்லுவார்கள் ......
மனைவியால் தான் எதுவும் சொல்ல முடியாதே....
(சந்தேக கேள்வி எழும்....அப்பெண்ணின் செயல்களை பொருத்து (தொடர்பில் இருந்தால்) )
மனைவி மனதில்படும் வேதனை பற்றி கணவனுகென்ன கவலை...
ஆண்களின் காதல் உலகத்துக்கே தெரிஞ்சாலும் பிரச்சனையே இல்லை....( ஒரு(இரு)தலை காதல் )
மொத்தத்தில் ஆண்களுக்கு பிரச்சனையே இல்லை ................. (full open type)


பாவம் பெண்கள்....எத்தனை இடங்களில் தங்கள் காதலை சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள் .......
1. வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சனை....
2. கணவன் வீட்டிற்கு தெரிஞ்சால் பிரச்சனை.... (பழைய,பள்ளி,கல்லூரி காதல்)
3.கணவனுக்கு தெரிஞ்சால் பிரச்சனை...... (சந்தேக கேள்வி எழும்...தொடர்பில் இல்லை என்றாலும்)
4. மொத்தத்தில் வாழ்க்கையே சீரழிந்து விடும்..............

மொத்தத்தில் ஆண்களால் மன பாரத்தை கவிதை,கதையின் மூலம் வெளியில் கொட்டி விட முடியும்.....
பெண்கள் மனதினுள் போட்டு புதைத்து வைத்து யாரிடமும் சொல்ல முடியாமல் அவதிபடுவார்கள் ....
மண்ணிற்குள் புதையும் போது தான் அவள் கவலையும் சேர்ந்தே புதையும் .... :(

இதில் சில ஆண்கள் வித்தியாசம் மனைவியின் பழைய காதல் வாழ்க்கை பற்றி தெரிந்திருந்தாலும் அது எப்படி இருந்தால் என்ன?.. என் மனைவி பற்றி எனக்கு தெரியும்,என்று அது சம்பந்தப்பட்ட எந்த ஒரு கேள்வியும்  மனைவியிடம் கேட்பது இல்லை.... யாரேனும் அது சம்பந்தமா கேள்விகள் கேட்டால் கூட உங்க வேலைய நீங்க பார்த்துட்டு போங்க.  என் பொண்டாட்டி பற்றி எனக்கு தெரியும், என்று சொல்லும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்......... அப்படிபட்ட ஆண்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.


"எல்லாவற்றிற்கும் மேலாக உலகில் மிகச் சிறந்த காதல் கணவன் மனைவி காதலே". 


நேற்று ஒரு படம் பார்த்தேன் சில கேள்விகள் மனதில் தோன்றியது எழுத வேண்டும் என்று நினைத்தேன் .............. என் மனதில் தோன்றிய குப்பைகளை கொட்டிவிட்டேன் நண்பர்களே.  :)