Sunday, May 26, 2013

சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தில் எனக்கு பிடித்த வரிகள் (Practical Life)


  •       நான் நினைச்ச மாதிரி மூர்த்தி இல்லடி ....... கேட்டா அவன் நினைச்ச மாதிரி நான் இல்லைன்னு சொல்லுறான். நாங்க இரண்டு பேரும் பிரிஞ்சி ரொம்ப நாள் ஆகுது.

  •     மஞ்சு உன்னை கல்யாணம் பண்ணிக்கலைனா எனக்கும் சின்ன வயசுல ஒரு புனிதமான காதல் இருந்துச்சுன்னு  சாகுற வரைக்கும் சொல்லிட்டு இருந்துருப்பேன்.  உன்னை கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறமாதான் தெரிஞ்சுது, அப்படி சொல்லுறதுக்கு மட்டுமே அது சரி. 
  
  •        காலைல எழுந்திரிச்சதுல இருந்து நைட் தூங்குரவரைக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு அது சந்தோஷமா அமையலைன்னா அன்னைக்கு நைட் தூக்கம் வராது.  ஒருநாள் இரண்டு நாள் தூங்காம இருக்க முடியும் அது சகஜம் ஆனால் காலம் பூரா தூங்காம இருக்க முடியாது.   
  •     சின்ன வயசு காதலை தெய்வீகம் புனிதம்ன்னு சொன்ன அத்தனை பேரும், தன்னுடைய சின்ன வயசு காதலியை கல்யாணம் பண்ணிருக்க மாட்டாங்க.  முதல் முத்தமும் முதல் காதலும் மறக்க முடியாதுன்னு சொன்ன மார்க்சிங் கார்க்கியே .......... தன்னுடைய முதல் காதலியோடு வாழ முடியலை.  முதல் காதலை மறக்க முடியாதுன்னு சொல்லிருக்காங்களே தவிர.......வாழ முடியும்ன்னு யாரும் சொல்லலை.  

  •         "10வருஷமா காத்திருந்து கல்யாணம் பண்ணினவனை நானே எப்படி புடிக்கலைன்னு சொல்ல முடியும்".

  •         "முதல்நாள் சைக்கிள் ஒட்டினது, முதல்நாள் கல்லூரி போனது, முதல் நாள் ஸ்டேஜ்ல பேசினது இப்படி எத்தனையோ மறக்க முடியாத நிகழ்ச்சி மாதிரிதான் முதல் காதலும்.  அதை மட்டுமே தகுதியா வச்சு நாம கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பு.  இனிமேலும் சேர்ந்திருந்தா நாம இரண்டு பேருல யாரவது ஒருத்தர் தான் உயிரோட இருப்போம்.  உனக்கும் வாழ்க்கை இருக்கு எனக்கும் வாழ்க்கை இருக்கு."

  •        கல்யாணம்கிறது one way மாதிரி போய்ட்டா திரும்பவே முடியாது அதனால போறதுக்கு முன்னாடியே நல்லா யோசிக்கனும்........யோசிக்கிறதுக்கு அறிவு வேணும்.

  •      உலகம் என்ன ஏதுன்னு தெரியாத வயசுல கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. உலகம் புரிற வயசுல அவருக்கு என்னை புடிக்கலை ....... எனக்கு அவர புடிக்கலை . 

  • உண்மையான love ஒருத்தனுக்கு வந்ததுக்கு அப்புறம் ........... இந்த உலகத்துல உள்ள எல்லா பொண்ணுங்களும் அவனுக்கு அம்மாவும் தங்கச்சியும் மாதிரி நினைப்பான்.

                                                             

Tuesday, May 21, 2013

வாழ்க்கை


பொழுது போக்குக்காக காதலிக்காதீர்கள்
காதலுக்காக வாழ்க்கையை இழக்காதீர்கள்

இரண்டு வரிக்கும் இரு வேறு அர்த்தங்கள் புரிந்து கொண்டு நடந்தால் வாழ்க்கை இன்பமாகும்.
புரியாத வாழ்க்கை பிரிந்து போகும்.


Wednesday, May 15, 2013

காதல்

படிப்பு,அறிவு,தகுதி,பணம்,அழகு இதில் ஏதோ ஒன்றை அடிப்படியாக வைத்து வந்த காதல் என்றும் நிலைக்காது அது நிலையானதும் அல்ல. என்றாவது ஒருநாள் அது உன்னை விட்டு போய்விடும். பாசம் என்ற ஒன்றை மட்டும் அடிப்படையாக வைத்து வந்த காதல் என்றுமே நிலையானது. அதற்க்கு அழிவே கிடையாது.

பாசத்தை வைத்து காதலித்து பார் அது தான் அழியாத காதல். காதலர்கள் இறந்தாலும் அவர்களது காதல் இறப்பதில்லை......

காதல் என்பது இளம் வயதில் வரும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வரும் காதல் என்று அர்த்தம் இல்லை. அம்மா அப்பா இருவரும் குழந்தைகள் மீது வைப்பதும் காதல் தான். கணவன் மனைவி இருவருக்கும் இடையில் இருப்பதும் காதல் தான். எல்லா காதலும் பாசத்திற்கு மட்டுமே அடிபணியும்.

உன் அம்மா அப்பாவை காதல் செய்
உன் அண்ணன் தங்கை உறவை காதல் செய்
உன் நட்பை காதல் செய்
உன் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வாழுங்கள் உங்கள் வாழ்க்கை பூந்தோட்டமாக மலரும்......... :) 


தேடிக்கிடைப்பது காதல் இல்லை தானாய் வந்து அமைவது தான் காதல் :)

Love is sweet pain ..... :)



அழகு

பண்பான கணவனுக்கு உண்மையாக நடப்பது நல்ல மனைவிக்கு அழகு ......

பாசமான மனைவிக்கு பாசத்திற்க்கு இலக்கணமாய் விளங்குவது நல்ல கணவனுக்கு அழகு ..... :)