சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தில் எனக்கு பிடித்த வரிகள் (Practical Life)
- நான் நினைச்ச மாதிரி மூர்த்தி இல்லடி ....... கேட்டா அவன் நினைச்ச மாதிரி நான் இல்லைன்னு சொல்லுறான். நாங்க இரண்டு பேரும் பிரிஞ்சி ரொம்ப நாள் ஆகுது.
- மஞ்சு உன்னை கல்யாணம் பண்ணிக்கலைனா எனக்கும் சின்ன வயசுல ஒரு புனிதமான காதல் இருந்துச்சுன்னு சாகுற வரைக்கும் சொல்லிட்டு இருந்துருப்பேன். உன்னை கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறமாதான் தெரிஞ்சுது, அப்படி சொல்லுறதுக்கு மட்டுமே அது சரி.
- காலைல எழுந்திரிச்சதுல இருந்து நைட் தூங்குரவரைக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு அது சந்தோஷமா அமையலைன்னா அன்னைக்கு நைட் தூக்கம் வராது. ஒருநாள் இரண்டு நாள் தூங்காம இருக்க முடியும் அது சகஜம் ஆனால் காலம் பூரா தூங்காம இருக்க முடியாது.
- சின்ன வயசு காதலை தெய்வீகம் புனிதம்ன்னு சொன்ன அத்தனை பேரும், தன்னுடைய சின்ன வயசு காதலியை கல்யாணம் பண்ணிருக்க மாட்டாங்க. முதல் முத்தமும் முதல் காதலும் மறக்க முடியாதுன்னு சொன்ன மார்க்சிங் கார்க்கியே .......... தன்னுடைய முதல் காதலியோடு வாழ முடியலை. முதல் காதலை மறக்க முடியாதுன்னு சொல்லிருக்காங்களே தவிர.......வாழ முடியும்ன்னு யாரும் சொல்லலை.
- "10வருஷமா காத்திருந்து கல்யாணம் பண்ணினவனை நானே எப்படி புடிக்கலைன்னு சொல்ல முடியும்".
- "முதல்நாள் சைக்கிள் ஒட்டினது, முதல்நாள் கல்லூரி போனது, முதல் நாள் ஸ்டேஜ்ல பேசினது இப்படி எத்தனையோ மறக்க முடியாத நிகழ்ச்சி மாதிரிதான் முதல் காதலும். அதை மட்டுமே தகுதியா வச்சு நாம கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பு. இனிமேலும் சேர்ந்திருந்தா நாம இரண்டு பேருல யாரவது ஒருத்தர் தான் உயிரோட இருப்போம். உனக்கும் வாழ்க்கை இருக்கு எனக்கும் வாழ்க்கை இருக்கு."
- கல்யாணம்கிறது one way மாதிரி போய்ட்டா திரும்பவே முடியாது அதனால போறதுக்கு முன்னாடியே நல்லா யோசிக்கனும்........யோசிக்கிறதுக்கு அறிவு வேணும்.
- உலகம் என்ன ஏதுன்னு தெரியாத வயசுல கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. உலகம் புரிற வயசுல அவருக்கு என்னை புடிக்கலை ....... எனக்கு அவர புடிக்கலை .
- உண்மையான love ஒருத்தனுக்கு வந்ததுக்கு அப்புறம் ........... இந்த உலகத்துல உள்ள எல்லா பொண்ணுங்களும் அவனுக்கு அம்மாவும் தங்கச்சியும் மாதிரி நினைப்பான்.
No comments:
Post a Comment