துன்பம் வரும்போது இதுவும் கடந்து போகும் என்று நினைக்கும் மனது ....
இன்பமாக இருக்கும் சமயத்தில் இதுவும் கடந்து போகும் என்று ஏன் நினைக்க மறுக்கிறது.... என்று தான் எனக்கு புரியவில்லை .........மொத்தத்தில் இன்பமும் சரி துன்பமும் சரி வாழ்க்கையில் என்றுமே நிரந்தரமில்லை ........
இப்போதெல்லாம் துன்பம் வரும்போது இதுமட்டும் என்னை ஏன் துரத்துகிறது. நான் சந்தோஷமாக இருப்பது அந்த துன்பத்திற்கு புடிக்கவில்லையோ என்னவோ என்று என் மனதிற்கு தோன்றுகிறது......... இதில் என்ன சிரிப்பான விஷயம் என்றால்..........எனக்கு இன்பம் வரும்போதெல்லாம் சொல்லிவிட்டு வருகிறதோ இல்லையோ துன்பம் வரும்போது கட்டாயம் என்னிடம் நான் வரப்போகிறேன் என்று சொல்லிவிட்டு தான் வருகிறது.அதை நினைத்தால் தான் சிரிப்பு சிரிப்பா வருது.
ஆனால், அதை எதிர்த்து போராடும் சக்தி மட்டும் தான் எனக்கு இன்னும் கடவுள் தரவில்லை.
துன்பம் வரும் செய்தியை முன்கூட்டியே எனக்கு தெரியபடுத்துபவர்க்கு அதை சமாளிக்கும் திறமையும் அல்லது அதை எதிர்த்து போராடும் மனதைரியமும் இன்னும் எனக்கு அனுப்பிவைக்க மறுக்கிறாரே ஏன்?
எனக்கு வரப்போகும் துன்பத்தை வெளியில் சொல்லிக்கொள்ள எனக்கு மனதைரியமும் இல்லை ....................

No comments:
Post a Comment