என் போஸ்ட்களை படிக்கும் அனைவருக்கும் நன்றி .....
சில நாட்களாகவே என் மனதில்..... உண்மையாக நடந்த கதைகள் என் (தோழிகள்,சகோதரிகள்,தெரிந்தவர்கள்) மனதை பாதித்த கதைகள், நான் கேட்டறிந்த கதைகள், எல்லாம் உங்களுடன் இதன் மூலம் பஹிர்ந்து கொள்ளலாம் என விரும்புகிறேன்.
எனக்கு தெரிந்த அண்ணன் ஒருவர் சில நாட்களாக என்னிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறார். என் கணவரும் வெகுநாட்களாகவே என்னிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறார். ஏதேனும் சிறு கதைகள் எழுதலாமே என்று. எல்லோரும் சொன்னால் போதுமா மனதில் பட்டதையும், கேட்டறிந்த விஷயங்களையும், எல்லாம் சொல்லுவது எளிது அதை ஒரு கதையாக எழுதுவது சாத்தியமல்ல.
அப்படி எழுத வேண்டும் என்றால் அதற்கென சில விதிமுறைகள் இருக்கின்றன...
- முதலில் கதை எழுதுபவர் கதையோடு இனைந்து இருக்க வேண்டும் .
- கதையில் வருவது எல்லாம் தனக்கு நடந்தது போல யோசித்து எழுத வேண்டும்.
- அடுத்தவர்களுக்கு புரியும் படி இருக்க வேண்டும்.
- நான் எழுதும் (எழுதப்போகும்) உண்மை கதைகள் நீங்கள் எல்லாரும் படித்து விட்டு போவதற்காக எழுதுவது அல்ல. உங்கள் வாழ்க்கையிலும் இது போன்ற தவறுகள் ஏதும் நடக்காமல் பார்த்துக் கொள்ளவே நான் எழுதுகிறேன்.
- கதைகள் என்றுமே படித்து விட்டு போவதற்க்கு அல்ல......மாறாக நம் நடைமுறை வாழ்க்கையில் நமக்கு தெரியாத சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்வதற்கும், மாற்றி அமைப்பதற்கும் தான்.
- சில பல முடிவுகளை நாம் எடுப்பதற்க்கு கூட, நாம் பெரிய பெரிய எழுத்தாளர்கள் எழுதிய கதைகள் நாம் கேட்டறிந்த சில விஷயங்களை மனதில் கொண்டு தான் முடிவு எடுக்கின்றோம். இப்படித் தான் பெரும்பாலான கதைகள் நமக்கு உதவுகின்றன.
- என் கதையும் மற்றவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைபடுகிறேன். படித்துவிட்டு மறந்து விடுவதற்கு அல்ல.
என் மனதில் பட்ட சில விஷயங்களை எழுதி இருக்கிறேன். உங்களுக்கு இதில் ஏதேனும் கேள்வியோ, தவறோ, சந்தேகமோ இருந்தால் தாரளமாக இதில் தெரிவிக்கலாம்.
நான் கதை எழுத அரம்பித்தவுடன் அந்த பகுதியை உங்களுக்கு கண்டிப்பாக இதில் பகிர்ந்து கொள்வேன்.

No comments:
Post a Comment