"பிரித்து பார்ப்பது நீயா நானா?" புரியவில்லை எனக்கு .......
பெங்கலூரில் இருக்கும் என் அக்காவிடம் பேசி வெகுநாட்கள் ஆகிறது என்று அவளுக்கு போன் பண்ணினேன்.
என்னடி எப்படி இருக்க நல்லா இருக்கியா என்று கேட்டேன் ...
அவளுடைய பதில் உம் என்று வந்தது......
என்னவோ ஏதோ என பதறி போனேன் நான்....
என்ன ஆச்சுடி என்று கேட்டேன்.....ஒன்றும் இல்லை என்று சொன்னவள்.....மெதுவா தயங்கி தயங்கி சொல்ல வந்தாள்....
ஊரில் இருந்து அவள் அம்மா அப்பா அவளை பார்க்க வருவதாகவும் சிறிது நாள் தங்கிவிட்டு போவதாகவும் வருத்தம் கலந்த சந்தோஷத்தோடு சொன்னால்.....
இதை ஏன் இப்படி சோகமா சொல்லி தொலைக்க.....சந்தோஷப்பட வேண்டியதுதான என்று சொன்னேன்.....
என் கணவருக்கும் சந்தோஷம் என்றால் தான்....நானும் சந்தோஷமாக இருப்பேன் என்றாள் .....
ஏன் உன் கணவருக்கு ஏன் சந்தோஷம் இல்லை என்று கேட்டேன்......
(அவள் கணவர் தற்போது ஒரு மாத காலம் விடுமுறை எடுத்து அவர் அம்மா அப்பா அண்ணண் என குடும்பத்தோடு சிறிது நேரம் கழிக்கலாம் என முடிவு எடுத்திருப்பதாகவும், அதற்க்கான விடுப்பும் எடுத்துவிட்டார் என்றும். அப்போது என் அக்காவின் அம்மா,அப்பா குடும்பத்துடன் ஐந்து நாட்கள் வெளியில் சுற்றலாம் என்றும்.... அவர்கள் இருவரும் பேசி முடிவு எடுத்து. இடத்தையும் குறித்து விட்டதாக சில நாட்களுக்கு முன்பு தான் என்னிடம் சொல்லிருந்தாள்.)
அவருக்கு அதில் ஒன்றும் வருத்தமெல்லாம் இல்லை. ஏனோ எனக்கு அப்படி தோன்றுகிறது என்று சொன்னாள்......
அப்புறம் என்ன, எல்லாம் நல்லாதனே போகுது. இதுக்கு ஏன் எதையோ பறிகொடுத்தவ மாதிரி இப்படி இருக்கன்னு கேட்டேன்.......இல்லைனா அவர் எதுவும் சொன்னாரா என்று கேட்டேன்......
அம்மா வீட்டில் இருக்கும் போது அங்கு சில பொருட்கள் வாங்கவேண்டும் என்று சொன்னேன்....அதற்க்கு அவர் நீ போய் வாங்கு, அங்க வந்து நான் என்ன செய்யபோறேன் என்று சொன்னார்.....
ஆமாம், அவர் சொல்லுவதும் சரி தானே என்று நான் சொன்னேன்.
அதெல்லாம் சரிதான் நான் அதை ஒன்னும் சொல்லலை.....அதனால், அவர் நான் அம்மா வீட்டுக்குப் போறேன்.......நீ பொருள் எல்லாம் வாங்கிகொண்டு வா என்று சொல்லிவிட்டார்.
(அவள் அம்மா வீட்டிலிருந்து அவளுடைய அத்தை வீடு வரை பஸ்ஸில் செல்ல குறைந்தது ஒன்னரை மணி நேரமாவது ஆகும்.)
நீங்களும் இருந்தால் நன்றாக இருக்குமேன்னு சொன்னேன்.....அவரோ, நான் அங்க இருந்தால் நாலு சாதிசனத்தை பார்த்துப்பேன் என்று சொல்லிவிட்டார் (சொந்தக்காரங்க வீட்டுக்கு போகணும்னா நானும்தான் போகணும்ன்னு ஆசைபடுவேன்...அங்க அவர் தனியா சந்திக்க ஒரு சிலர் மட்டும் தான் இருக்காங்க கொறஞ்சது மூன்று பேருதான் அவர்கள் மூனு பேரையும் சந்திக்க கிட்டத்தட்ட 4மணி நேரம் தான் தேவைப்படும்ன்னு அவங்களே சொல்லிருக்காங்க). நானும் கொஞ்ச நேரம் தான் ஆகும்.....நீங்க வேணும்னா என் அண்ணா கூட இல்லாட்டி என் அப்பா கூட.....அப்படின்னு சொல்லும் போதே அதெல்லாம் வேண்டாம் என்று முகத்தில் அடித்தாற்போல சொல்லிவிட்டார்...என் கண்ணில் கண்ணீர் மட்டுமே வந்தது, பதில் பேச தெரியவில்லை...நானும் இதுக்கு மேல இதை பற்றி பேச வேண்டாம் என்று நிறுத்திவிட்டேன்...எங்கள் திருமணம் முடிந்ததிலிருந்து இன்று வரை என் அம்மா அப்பாவுடன் என் கணவரும் சேர்ந்து வெகுநேரம் பேசியதோ, அவர்களுடன் நேரம் செலவழித்ததோ கிடையாது. (விருந்துக்கு போனது கூட எல்லாம் என் கணவர் வீட்டின் சொந்தங்களுக்கு மட்டும் தான் போனோம்....நாட்கள் குறைவாக இருந்ததால்....சிலர் வீட்டிற்க்கு நான் கேட்டதற்க்கு கூட நேரம் இல்லை என்று சொல்லிவிட்டார்...அப்போது அவர் அங்கு வேலை பார்த்ததால் நானும் ஒன்றும் சொல்லவில்லை விட்டுவிட்டேன்) இன்று வரை அவருக்கு அப்படி ஒரு எண்ணமும் கிடையாது....இனி அப்படி நினைப்பார என்று கூட எனக்கு தெரியவில்லை. அதற்க்கு காரணமும் எனக்கு தெரியவில்லை.....அப்படி, நான் ஒருவேளை கொஞ்ச நேரம் என் அம்மா அப்பாவுடன் இருக்கணும் என்று சொன்னால் அவர் கூறும் பதில் "நீ வேனா இரு....நான் போறேன்...நீ எப்போ வரியோ வா" இதைத் தான் சொல்லுவார்..... இப்படி சொன்னா அம்மாவீட்டில எப்படி என் கணவர் விட்டுட்டு இருக்க மனம் வரும்....அதனால் நான் ஏதும் சொல்லுவது கூட இல்லை. நான் என் அத்தை மாமாவை "என்னை பெற்றெடுக்காத தாய் தந்தையாக" தான் நான் பார்க்கிறேன்...... அது போலதான் என் கணவரும் நினைப்பார் என்று நான் நினைத்தேன். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்பது போல அவருடைய சில நடவடிக்கைகளை பார்த்து நான் தெரிந்து (கொண்டே இருக்கேன்) கொண்டேன்...... எனக்கும் சில ஆசைகள் இருக்கு.....அவர் என் அம்மா அப்பாவை வேறு யாரோ என்று பார்க்காமல் இருந்தாலே போதும் என்று தான்.....அவர்களுடன் வெளியில் செல்ல வேண்டும். எங்க போகலாம் சொல்லுங்கன்னு சொன்னா ....நீயே எங்க போகணும்ன்னு சொல்லு நாம போகலாம் என்று சொல்கிறார்.....( என் கணவரை என்னால் குறை சொல்லவே முடியாது ஒரு கணவராக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ எல்லாமே செய்கிறார்....அப்படி இருக்கும்போது என் கணவரிடம் நான் என்ன குறை சொல்ல என்று சொன்னால்)
சரி ஆகிடும் அதெல்லாம் ஒன்னும் நினைக்காதே என்று நான் சொல்லிக்கொண்டே...அடுத்து ஒரு கேள்வி கேட்டேன்....சரி அதென்ன சில நடவடிக்கைய பார்த்தன்னு கேட்டேன்.
இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சு என்னுடைய அம்மா அப்பா இங்க வாராங்க, என்னையும் பார்த்துட்டு கொஞ்ச நாள் இங்க இருந்து பக்கத்துல உள்ள சில இடங்களையும் சுத்தி பார்த்துட்டு போகலாம்ன்னு. அதுக்கு காரணமே நான் தான்.... எனக்கு ரொம்ப ஆசையா இருந்துது... என் அம்மா அப்பாவை இங்க கூப்பிடனும்ன்னு...... ஏன்னா, ஒருமாதம் விடுமுறை எடுத்து ஊருக்குன்னு போனா கூட அம்மா வீட்டுக்கு கொறஞ்சது ஐந்து நாளுக்கு மேல இருக்கிறது அபூர்வம்.....அவங்க இங்க வந்தாங்கன்னா அப்படியாவது என் கணவரும்.... அவர்களும் சேர்ந்து பேசுறது பழகுறதை பார்க்கனும்ன்னு எனக்கு ஒரு ஆசை ( என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது அவள் குரல் உள்ளே சென்றது....ம்ம்ம் அழுது கொண்டு இருந்தால்) அவங்க அம்மா, அப்பா, அண்ணா, குழந்தைங்கன்னு ரொம்ப ஆசையா அவங்கள பார்ப்பதை,பேசுறதை, அவங்களை வெளிய எங்கையாவது நல்ல இடங்களுக்கு கூட்டிட்டு போறதையும் அதிகம் விரும்புவாங்க, அதை பபற்றி என்கிட்ட நல்லா பேசுவாங்க....அது அவங்களுக்கு ரொம்ப புடிக்கும்......செலவை பற்றி எல்லாம் கவலை பட மாட்டங்க பல லட்சம் செலவான கூட பரவாயில்லைன்னு சொல்லுவாங்க. ஆனா, இதுல கொஞ்சம் கூட என் அம்மா, அப்பா குடும்பத்தை பற்றி பேசியது கிடையாது. அந்த அளவுக்கு என் அம்மா அப்பாவுடன், அவங்க பேசி பழகினதும் கிடையாதுன்னு (நானும் என் மனசை அப்படியே தேத்திப்பேன்) .... இப்போ என் அம்மா, அப்பா வந்தா என்னால விடுமுறை எடுக்க முடியாதுன்னு சொன்னாங்க....அது தெரியும் ஏன்னா இப்போதான் ஒருமாதம் விடுமுறை கேட்டுருக்கு....அப்படி இருக்கும் போது.....(இவங்க வந்தா விடுமுறை எடுக்க முடியாதுன்னு எனக்கு தெரியும்)..... நீயே கூடிட்டு போய் சுத்திகாட்டுன்னு சொன்னாங்க. சரின்னு சொல்லிட்டேன்.
(என் வீட்ல இவங்களும் எல்லா இடங்களுக்கும் வரணும்ன்னு ஆசை... என் அம்மா,அப்பா பேசும் போதெல்லாம் மாப்பிள்ளையும் வரசொல்லு அதெல்லாம் வருவாங்க... அப்படின்னு அவங்களே சொல்லிபாங்க நான் இல்லை விடுமுறை கிடைக்காதுன்னு சொன்னா கூட அதுல்லாம் வருவாங்கய....நீ சும்மா இருன்னு, என்னை சொல்லுவாங்க இதை எல்லாம் எப்படி நான் என் கணவரிடம் சொல்லுவேன்).....ஆனால், ஏனோ என் மனசுல இப்போ என் அம்மா அப்பா ஏன் வாராங்கன்னு கூட யோசிக்க தோணுது...(என் கணவர் என் கிட்ட பேசுறதை எல்லாம் பார்க்கும் போது) .....நாங்க வேலை காரணமா ஊரு மாற்றி போகப்போரோம்ன்னு தான்...... நான் அம்மா அப்பாவை இவ்ளோ சீக்கிரம் கூப்பிட்டதுக்கு காரணம். இல்லாட்டி நான் வர சொல்லிருக்கவே மாட்டேன்.
சரி, அதையெல்லாம் நினைக்காத......வர்றவங்களை நல்லா பாத்துக்கோ உனக்கு மனசு மாறும்ன்னு சொன்னேன்.........
ம்ம்ம்ம் பார்க்கலாம்...... என்று சொன்னால் அழுது கொண்டே......
அப்போது அவள் என்னிடம் ஒரு கேள்வி கேட்டால் "மருமகளாய் வீட்டிருக்குள் அடியெடுத்து வைக்கும் பெண்ணிடம் .....அவளின் தாய் உன் அத்தை மாமாவை நீ அம்மா அப்பாவாகத் தான் நினைக்க வேண்டும்......எங்களை எப்படி கவனித்தாயோ அப்படிதான் அவர்களையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லி அனுப்புகிறார்கள்". ஆனால், இதை போல ஏன் ஆண்களுக்கு கூறுவதில்லை..... இல்லைன்னா.....அவர்களாவது அப்படி புரிந்து கொள்ள கூடாதா "திருமணம் முடிந்த பின் எனக்கும் இனி ....இரண்டு தாய், தந்தை என்று".....ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இப்படி நினைத்துக் கொண்டால், எந்த குடும்பத்திலும் பிரிவும் வராது, பிரித்து பார்க்கும் எண்ணமும் வராதுன்னு என்னிடம் சொன்னால்.
அப்படியே என்னிடம் இன்னொன்றும் கேட்டால் ...." நான் என் அத்தை மாமாவை என் அம்மா அப்பாவாக தான் பார்க்கிறேன்.....அவர்களுக்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று எனக்கும் நிறைய கனவெல்லாம் இருக்கு ....... என் கணவரோ இப்படி, அவருடைய அம்மா அப்பா வேறு.... என் அம்மா அப்பா வேறு என்று பிரித்து பார்த்தால்........ எனக்கு தோனாதா, நான் மட்டும் ஏன் இப்படி எல்லோரும் ஒண்ணு நினைக்கேன்....நானும் இனி எதிலும் ஈடுபாடு இல்லாமல் அம்மா,அப்பா வேறு அத்தை,மாமா வேறு என்று சிறு சிறு விஷங்களிலும் யோசிக்கலாமோன்னு கூட தோனுது..... அப்படி நினைக்க ஆரம்பித்தால் சின்ன சின்ன விஷங்களில் கூட சண்டை வரும் எதற்க்கும் ஒத்து போகாது....."எனக்கு ஒரே ஒரு ஆசை தான் என் அம்மா அப்பாவையும் என் கணவர் அவருடைய அம்மா அப்பாவை பார்ப்பது போல பார்க்க வேண்டும்." எனக்குன்னு வேறு ஆசை இல்லை....என் வீட்டில் என் அம்மா,அப்பா என் கணவரை தங்களுடைய மூத்த மகனாக தான் பார்க்கிறார்கள் அது ஏன் இவருக்கு புரியவில்லை...... இதை எல்லாம் நான் சொல்லி தான் புரியவைக்க வேண்டுமா?.....
சரி அழாத எல்லாம் சரி ஆகிடும்.....அப்படின்னு நான் சொன்னேன்.....அவள் கேட்க வரும் கேள்வி "குடும்பத்தை பிரித்துப் பார்ப்பது நீயா நானா?"..... இப்படி ஒரு கேள்வி அவள் மனதில் எழுவதற்கு என்ன காரணம்.....இன்னும் என்னிடம் சொல்லாமல் சில விஷயங்கள் வைத்திருக்கிறாளோ என்னவோ என்று என் மனதுக்குள் தோன ஆரம்பிக்கிறது.......
கடைசியில், அவளுடைய மனக்குழப்பத்தை எப்படி தீர்ப்பதுன்னு....எனக்கு வழி தெரியவில்லை... :(
வரப்போகும் அவளுடைய அம்மா அப்பாவிடம்....இவள் மனதில் உள்ளதை கூராமல் நன்றாக கவனித்துக் கொள்வாளா?.......
என்ன தான் நடக்கு என்று பார்ப்போம்?.....
அடுத்த போஸ்ட்டில் நடந்ததை சொல்லுகிறேன்...
கண்ணீரோடு ஒரு பெண்ணின் மனம்..... :'(

"மனைவி கணவனுடைய குடும்பத்தையும்....கணவன் மனைவியுடைய குடும்பத்தையும் தன் குடும்பமாக நினைக்க ஆரம்பித்துவிட்டால், இரு குடும்பத்துக்குள்ளும் சரி.... கணவன்,மனைவிகுள்ளும் சரி..... குடும்பத்தை பிரித்து பார்க்கிறோம் என்கிற சண்டையும் மனக்குழப்பமும் வராது.
கடைசியில், அவளுடைய மனக்குழப்பத்தை எப்படி தீர்ப்பதுன்னு....எனக்கு வழி தெரியவில்லை... :(
இதுநாள் வரை, அவளை பாசத்துடன் வளர்த்து, ஆளாக்கி, எது கேட்டலும் இல்லை என்று சொல்லாமல் வாங்கி கொடுத்து. எல்லாம் அவளுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தும்... காசுகளை எல்லாம் எதிர் பார்க்காமல், பலர் வியக்கும் படி அனைவரின் முன் நின்று திருமணம் செய்து வைத்தும்...திருமணம் செய்து போன மகள் வீட்டிற்க்கு வரும் போது, எதையும் எதிர் பார்க்காமல்...தன் உடல் நிலை சரி இல்லை என்றாலும்..... நான் தான் என் பிள்ளையை பார்த்துக் கொள்வேன் என்று ஆசையாக, வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருந்த.... தன் அம்மா அப்பாவை.....இவள் நல்ல முறையில் கவனித்துக் கொள்வாளா?.... என் மகளுக்கு, என் மகளுக்கு என்று பேசிய தாய் தந்தையை என் அம்மா வருகிறார்கள் என் அப்பா வருகிறார்கள் என்று விழி மேல் விழி வைத்து இவள் காத்துகொண்டு இருப்பாளா? .... அவர்கள் வருகையை தேடி?....
வரப்போகும் அவளுடைய அம்மா அப்பாவிடம்....இவள் மனதில் உள்ளதை கூராமல் நன்றாக கவனித்துக் கொள்வாளா?.......
என்ன தான் நடக்கு என்று பார்ப்போம்?.....
அடுத்த போஸ்ட்டில் நடந்ததை சொல்லுகிறேன்...
கண்ணீரோடு ஒரு பெண்ணின் மனம்..... :'(

No comments:
Post a Comment