Wednesday, July 24, 2013

கிணறும் இத்து போன கயிறும்

பிழைப்பு தேடி ஒரு பெரிய குடும்பம் ஊரு விட்டு ஊரு சென்று கொண்டிருந்தனர்.

     ரொம்ப தூரம் நடந்தே வந்ததால்..... ஓய்வு எடுக்க ஒரு இடம் தேடினர்.  எல்லாரும் கொண்டு வந்த தண்ணீர்  தீர்ந்து விட்டது.  பயங்கர தாகம் என்ன செய்யவதென்று யாருக்கும் புரியவில்லை.  இரவு நேரம் நெருங்கி கொண்டிருந்தது.

     அப்போது அங்கே தூரத்தில் ஒரு இடிந்த வீடு இருப்பதை கண்டனர் இரவு நேரம் நெருங்கி விட்டது. அங்கே தங்கிவிட்டு நாளை காலை செல்லலாம் என முடிவு எடுத்தனர்.

     அருகில் வந்த பின்பு தான் இங்கு ஒரு கிணறு இருப்பதையும் கண்டனர். கிணற்றின் மேலே இது நல்ல தண்ணீர் கிணறு என்று அட்டையில் எழுதி இருந்ததை கண்டனர். எல்லோருக்கும் சந்தோஷம் தாங்க முடியவில்லை.  கிணற்றில் தண்ணீர் நிறைய இருந்தது ஆனால் அதில் தண்ணீர் இறைப்பதர்க்கான பாத்திரம் எதுவும் இல்லை.

     அவர்கள் பிழைப்பு தேடி போவதால் சில சமையல் பொருட்கள் எல்லாம் எடுத்து தான் வந்திருந்தார்கள். தண்ணீர் இல்லாமல் இருந்ததால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது தண்ணீரை கண்டதும் அவர்களுடைய மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் போய்விட்டது.

     குழந்தைகள், முதியோர் என பெரிய குடும்பம் இவர்களது குடும்பம். எல்லோரும் பசியுடனும் தாகத்துடனும் இருந்தனர். 

     அங்கே ஒரு இத்து போன கயிறு ஒன்று கிடந்தது, மேலும் அந்த இடிந்த வீட்டிற்க்குள் ஏதேனும் கிடைக்குமா என்று பார்த்தார்கள். அங்கே வாளி ஒன்றும் இருந்தது.......

     அந்த குடும்பத்தில் உள்ள ஒருவன் இதை வைத்து நான் தண்ணீர் இறைத்து தருகிறேன் என்று சொன்னான். எல்லோரும் எனக்கு எனக்கு என்று போட்டி போட்டுக் கொண்டு வந்தார்கள்.

     தண்ணீர் இறைக்கும் முன்னே அவன் தன் குடும்பத்திடம் ஒன்று கூறினான்.  "இந்த கயிர் வைத்து முழு வாளி தண்ணீரும் இறைக்க முடியாது அப்படி இறைத்தால் ..... கயிர் அறுந்து வாளியும் கிணற்றினுள்ளே போய்விடும்.  அதனால், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் இறைத்து தருகிறேன் எல்லோரும் பகிர்ந்து குடித்து கொள்ளவும் என்று கூறினான்".  எல்லோரும் எங்களுக்கு சம்மதம் என்று தெரிவித்தனர்.
 
     "அவனும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் இறைத்து கொடுத்தான்....எல்லோருடைய தாகமும் தீர்ந்தது".

      ஆணால் அவன் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கவில்லை......கேட்டால், நீங்கள் எல்லாரும் குடிங்க நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டான்.

     பெண்கள் தண்ணீர் கிடைத்து விட்டது கஞ்சியாவது காய்ச்சிடலாம் என முடிவு எடுத்தனர்.

     ஆண்களில் சிலர் நல்ல தண்ணீர் கிடைத்து விட்டது குளித்து விடலாம் என நினைத்தனர் (இனி எப்போ, எங்கே தண்ணீர் கிடைக்குமோ  என நினைத்தனர்).

     "யாரும் அடுத்து தண்ணீர் இறைக்க முன் வரவில்லை இவன் இறைப்பதிலே எல்லோரும் உபயோகபடித்தி கொண்டார்கள். கொஞ்ச நேரத்தில் கயிறின் நிலை கொஞ்சம் மோசமாக தான் இருந்தது. கொஞ்ச நேரத்தில் கயிறு அறுந்து வாளி கிணற்றினுள் விழுந்து விட்டது."

     "நல்ல வேலையாக கடைசியில் அவனும் ஒரு வாய் தண்ணீர் குடித்து விட்டான்".

இந்த கதை நம் வாழ்கைக்கும் பொருந்தும்:  பணமும் தண்ணீரும் ஒன்று தான்.

     அவசர பட்டு வாளி நிறைய தண்ணீர் இறைக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் ஒரு வாய் தண்ணீர் கூட கிடைக்காமல் போயிருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக கிணற்றில் தண்ணீர் இறைத்ததால், தண்ணீரும் கிடைத்தது தாகமும் தீர்ந்தது.  பணமும் அப்படிதான் எல்லோரும் நிறைய செலவு செய்து விட்டு ஒருவர் மட்டும் மிச்சம் செய்வதால் ஒன்றும் செய்து விட முடியாது. எல்லோரும் சேர்ந்து கொஞ்சம் நிதானமாகவே செலவு செய்ய வேண்டும் அப்போது தான் "கிணற்றில் இருந்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக தேவைக்கேற்ப தண்ணீர் எடுப்பது போல".... பணத்தையும் அளவுக்கு மீறி செலவு செய்யாமல்......சேர்த்து வைத்து அவ்வப்போது எடுத்துக் கொண்டால் எல்லோரும் பயன் பெற முடியும்.

              
                       


No comments:

Post a Comment