Sunday, June 30, 2013

உண்மை கதைகளுக்கான வரவேற்ப்பு ....

என் போஸ்ட்களை படிக்கும் அனைவருக்கும் நன்றி .....

         சில நாட்களாகவே என் மனதில்..... உண்மையாக நடந்த கதைகள் என் (தோழிகள்,சகோதரிகள்,தெரிந்தவர்கள்) மனதை பாதித்த கதைகள், நான் கேட்டறிந்த கதைகள், எல்லாம் உங்களுடன் இதன் மூலம் பஹிர்ந்து கொள்ளலாம் என விரும்புகிறேன்.
       எனக்கு தெரிந்த அண்ணன் ஒருவர் சில நாட்களாக என்னிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறார். என் கணவரும் வெகுநாட்களாகவே என்னிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறார். ஏதேனும் சிறு கதைகள் எழுதலாமே என்று. எல்லோரும் சொன்னால் போதுமா மனதில் பட்டதையும், கேட்டறிந்த விஷயங்களையும், எல்லாம் சொல்லுவது எளிது அதை ஒரு கதையாக எழுதுவது சாத்தியமல்ல.

   அப்படி எழுத வேண்டும் என்றால் அதற்கென சில விதிமுறைகள் இருக்கின்றன...
  1. முதலில்  கதை எழுதுபவர் கதையோடு இனைந்து இருக்க வேண்டும் .
  2. கதையில் வருவது எல்லாம் தனக்கு நடந்தது போல யோசித்து எழுத வேண்டும்.
  3. அடுத்தவர்களுக்கு புரியும் படி இருக்க வேண்டும்.
  4. நான் எழுதும் (எழுதப்போகும்) உண்மை கதைகள்  நீங்கள் எல்லாரும் படித்து விட்டு போவதற்காக எழுதுவது அல்ல.  உங்கள் வாழ்க்கையிலும் இது போன்ற தவறுகள் ஏதும் நடக்காமல் பார்த்துக் கொள்ளவே நான் எழுதுகிறேன்.
  5. கதைகள் என்றுமே படித்து விட்டு போவதற்க்கு அல்ல......மாறாக நம் நடைமுறை வாழ்க்கையில் நமக்கு தெரியாத சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்வதற்கும், மாற்றி அமைப்பதற்கும் தான். 
  6. சில பல முடிவுகளை நாம் எடுப்பதற்க்கு கூட, நாம் பெரிய பெரிய எழுத்தாளர்கள் எழுதிய கதைகள் நாம் கேட்டறிந்த சில விஷயங்களை மனதில் கொண்டு தான் முடிவு எடுக்கின்றோம்.  இப்படித் தான்  பெரும்பாலான கதைகள் நமக்கு உதவுகின்றன.
  7. என் கதையும் மற்றவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைபடுகிறேன். படித்துவிட்டு மறந்து விடுவதற்கு அல்ல.
     

     என் மனதில் பட்ட சில விஷயங்களை எழுதி இருக்கிறேன். உங்களுக்கு இதில் ஏதேனும் கேள்வியோ, தவறோ, சந்தேகமோ இருந்தால் தாரளமாக இதில் தெரிவிக்கலாம். 

     நான் கதை எழுத அரம்பித்தவுடன் அந்த பகுதியை உங்களுக்கு கண்டிப்பாக  இதில் பகிர்ந்து கொள்வேன்.


                                                               நன்றி .......


                                           

பேஸ்புக் காதலால் சீரழிந்த கல்லூரி மாணவி!

இணையதள காதலால் பல இளம் பெண்கள் சீரழிந்து வருகிறார்கள். பலரது சோகக்கதையை அறிந்த பிறகும் இணையதள மோகத்தில் சிக்கிக் கொள்ளும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அந்த வரிசையில் சென்னையில் ஒரு கல்லூரி மாணவி சீரழிந்து கதறிக்கொண்டு இருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அந்த பெண் செல்வி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). எம்.பி.ஏ. படித்து கொண்டு இருக்கும் அவர் புராஜக்ட் செய்வதற்காக சென்னை வந்துள்ளார்.

தேனாம்பேட்டை பகுதியில் தங்கி இருக்கும் செல்வி அங்குள்ள கம்ப்யூட்டர் மையத்திற்கு அடிக்கடி செல்வார். அப்போது பேஸ்புக் மூலமாக கோகுலகிருஷ்ணன் என்பவரின் நட்பு கிடைத்தது. இவர் அந்த கம்ப்யூட்டர் மையத்தின் உரிமையாளரின் நண்பர் ஆவார்.

பேஸ்புக் மூலமாக புராஜக்ட் தொடர்பாக செல்வியும், கோகுலகிருஷ்ணனும் பல தகவல்களை பரிமாறிக்கொண்டனர். இதனால் கோகுலகிருஷ்ணன் மீது செல்விக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இந்த நிலையில் ஒருநாள் புராஜக்ட்டுக்கு உதவி செய்வதற்காக செல்வியை, கோகுலகிருஷ்ணன் ஆட்டோவில் வெளியே அழைத்து சென்றார். ஆட்டோ நேராக அம்பத்தூர் சென்றது. அங்கு ஒரு கட்டிடத்தின் அருகே சென்றதும் ஏற்கனவே நின்ற நண்பர்களிடம் செல்வியை அவர் அறிமுகம் செய்தார். பின்னர் அவர்களை அனுப்பி விட்டார்.

செல்வியை மட்டும் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அறையில் பூட்டி வைத்து கற்பழித்தார். இதற்கு உடந்தையாக கம்யூட்டர் மைய உரிமையாளர் இருந்தார். அப்போது அவர்கள் செல்வியை ஆபாசமாகவும் படம் எடுத்துள்ளனர். அவர்களின் பிடியில் சிக்கிய செல்வி கதறி உள்ளார். உடனே கோகுலகிருஷ்ணன் எதுவும் தெரியாததுபோல் வெளியே சென்று விடு இல்லை என்றால் எனது நண்பர்களுக்கும் உன்னை விருந்தாக்கி விடுவேன் என்று மிரட்டினார். இதனால் செய்வது அறியாமல் திகைத்த செல்வி கண்ணீருடன் வெளியேறினார்.

அதன்பிறகு கோகுலகிருஷ்ணன் ஆபாச செல்போன் படத்தை காட்டியே செல்வியை மிரட்டினார். சீரழிந்த செல்வி அவரிடம் நியாயம் கேட்டார். அப்போது உன்னை திருமணம் செய்கிறேன் என கூறி சமாளித்தார். பின்னர் ஒருநாள் செல்வியும், அவரது உறவினர்களும் கோகுலகிருஷ்ணனை தேடி சென்றுள்ளனர். அப்போது ஏற்கனவே ரகசியமாக வேறொரு பெண்ணை கோகுலகிருஷ்ணன் திருமணம் செய்த குட்டு உடைந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி கண்ணீருடன் நடந்த சம்பவத்தை மனுவாக எழுதி இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இணையதளம் மூலம் ஏமாறும் இளம்பெண்களுக்கு செல்வி சீரழிந்த கதையும் ஒரு சாட்சியாக இருக்கட்டும்




                                          

Thursday, June 20, 2013

முதல் திருமண நாள்


இதுநாள் வரை உன் பாசத்தை இழந்தேன்....
இனி ஒரு நிமிடம் கூட உன் பாசத்தை இழக்க மாட்டேன்...
நான் சாகும் வரை .......

இந்த நாளை கொடுத்த அந்த ஆண்டவனுக்கு
முதலில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.....
அந்த கடவுள் உன்னையும் என்னையும்
ஒன்றாக இணைத்த நாள் ..........

நீ என் கழுத்தில் மாலையிட்டு ......
மாங்கல்ய தாலிகட்டி .....
எல்லோரும் நமக்கு அர்ச்சனை தூவி
ஆசிர்வாதம் வழங்கிய நாள்.....

உன்னில் நானும் என்னில் நீயும்
சரி பாதி என எனக்கு புரியவைத்த நாள்........
எனக்கு உனக்கும் இனி ஒரு குடும்பம் இல்லை
இரண்டு குடும்பம் என சொல்லிக் கொடுத்த நாள்.......
உடலால் மட்டும் அல்ல மனதாலும்
நாம் இருவர் சரி சமம் என தெரிந்து கொண்ட நாள் ......

நாம் இருவரும் முதல் முதலாக கை கோர்த்து
நடக்க ஆரம்பித்த நாள்.....
நான் சந்தோஷமாக இருந்த நாள்....
என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள்.....
ஒவ்வொரு வருடமும் திருவிழா போல
நான் கொண்டாட நினைக்கும் அந்த ஒரு நாள்........
நம் புது வாழ்க்கையில் நான் அடியெடுத்து வைத்த நாள்....

இம்ம்ம் இன்று நம் (முதல்) திருமண நாள் ....


                                      
                                       


                                           *******************








Monday, June 17, 2013

வாழ்நாள் முழுவதும் வேண்டும்....

எங்கிருந்தாயடா நீ ............
உன் பாசத்தை இத்தனை நாட்கள் இழந்து விட்டேனடா 

கவலை என்றால் என் தாயை போல.....
உன் தோள்சாய்த்து அனைத்துக்  கொள்வாயடா நீ 
தவறு செய்தால் என் தந்தையை போல....
அதை திருத்தி செய்ய கற்றுத் தருவாயடா நீ
தெருக்களில் நடந்து செல்லும் போது என் சகோதரனை போல.....
எனக்கு துணையாக இருந்து என்னுடன் வருவாயடா நீ
ஒரு தோழனாக இருந்து எனக்கு....
தோள் கொடுத்தாயடா நீ
ஒரு காதலனை போல......
எனக்கு அணைப்பும் ஆறுதலும் தந்தா(தருவா)யடா நீ
ஒரு குழந்தையை போல....
என்னிடம் அழகாக மழலை மொழியில்
பேசியும் அடித்தும் விளையாடுவாயடா
என் செல்ல கண்ணா(புஜ்ஜு) .....
ஒரு கணவனாக இருந்து என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ.....
அதெல்லாம் செய்தா(வா)யடா நீ .....

இப்போது மட்டும் அல்ல...
இதெல்லாம் என் வாழ்நாள் முழுவதும் வேண்டும்....
நான் இறக்கும் காலம் வரை உன் துணைவேண்டும் ......
அது போல நீ காட்டும் இந்த பாசமும் வேண்டும் ......
இது என்றும் மாறாமல் இருக்கும் என நம்புகிறேன்....

நம்பிக்கை தானே வாழ்க்கை ......  :)

                                                 
                                                 ******************

ஒரு முத்தத்திற்க்கு இத்தனை வகையா :-o

 ஒரு முத்தத்திற்க்கு இத்தனை வகையா  :-o

முத்தம் இதை அறியாதவர் இந்த உலகில் யாருமே இல்லை
குழந்தைகள் முதல் அறிந்து வைத்திருக்கும் ஒரு வார்த்தை .....

தாய் குழந்தையை அனைத்து கொடுக்கும் முத்தம் - அன்பின் வெளிப்பாடு

குழந்தையிடம் தாய் : (எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் கொடுப்பது)

உலகத்தில் விலை உயர்ந்த ஒன்று தான் குழந்தையின் முத்தம் ....

அம்மாவுக்கு ஒரு முத்தம் கொடும்மா செல்லம் என்று தாய் கேட்டவுடன்
குழந்தை தாயை அணைத்து கொடுக்கும் முத்தம்   - பாசத்தின் வெளிப்பாடு

ஒரு வித சின்ன எதிர் பார்ப்புடன் கொடுப்பது : (காதலன் ....காதலி)

காதலன் காதலி இருவரும் கொடுக்கும் முத்தம்     -காதலின் வெளிப்பாடு

கணவன் மானைவி இருவரும் கொடுக்கும் முத்தம் - அன்பு,பாசம்,காதல் இந்த முன்றின் வெளிப்பாடு

                               

Saturday, June 8, 2013

துன்பம் இன்பம் - நிரந்தரமில்லை

           
                       

         துன்பம் வரும்போது இதுவும் கடந்து போகும் என்று நினைக்கும் மனது ....
இன்பமாக இருக்கும் சமயத்தில் இதுவும் கடந்து போகும் என்று ஏன் நினைக்க மறுக்கிறது.... என்று தான் எனக்கு புரியவில்லை .........மொத்தத்தில் இன்பமும் சரி துன்பமும் சரி வாழ்க்கையில் என்றுமே நிரந்தரமில்லை ........

         இப்போதெல்லாம் துன்பம் வரும்போது இதுமட்டும் என்னை ஏன் துரத்துகிறது. நான் சந்தோஷமாக இருப்பது அந்த துன்பத்திற்கு புடிக்கவில்லையோ என்னவோ என்று என் மனதிற்கு தோன்றுகிறது......... இதில் என்ன சிரிப்பான விஷயம் என்றால்..........எனக்கு இன்பம் வரும்போதெல்லாம் சொல்லிவிட்டு வருகிறதோ இல்லையோ துன்பம் வரும்போது கட்டாயம் என்னிடம் நான் வரப்போகிறேன் என்று சொல்லிவிட்டு தான் வருகிறது.அதை நினைத்தால் தான் சிரிப்பு சிரிப்பா வருது.
     
       ஆனால், அதை எதிர்த்து போராடும் சக்தி மட்டும் தான் எனக்கு இன்னும் கடவுள் தரவில்லை.
   
        துன்பம் வரும் செய்தியை முன்கூட்டியே எனக்கு தெரியபடுத்துபவர்க்கு  அதை சமாளிக்கும் திறமையும் அல்லது அதை எதிர்த்து போராடும் மனதைரியமும் இன்னும் எனக்கு அனுப்பிவைக்க மறுக்கிறாரே ஏன்?

             எனக்கு வரப்போகும் துன்பத்தை வெளியில் சொல்லிக்கொள்ள எனக்கு மனதைரியமும் இல்லை ....................