இராஜதந்திரம்
http://en.wikipedia.org/wiki/Rajathandhiram
| Directed by | A. G. Amid |
|---|---|
| Produced by | Senthil Veeraasamy |
| Starring | Veera Regina Cassandra Pattiyal K. Shekar |
| Music by | Sandeep Chowta |
| Edited by | Praveen Antony |
Production
company |
Sunland Cinemas
White Bucket Productions |
| Distributed by | Fox Star Studios |
Release dates
|
|
Running time
| 135 minutes |
| Country | India |
| Language | Tamil |
மேல உள்ளது எல்லாம் wikipedia ல நான் சுட்டது தான் :P
கதைக்கு போலாமா.
A. G. Amid இவர் எத்தனை படம் எடுத்தாருன்னு எனக்கு தெரியாது ஆனா இந்த படத்தை பக்காவா நல்லா எடுத்துருக்காரு. செம காமெடி movie, இண்டரஸ்டிங் movie. நான் இந்த படம் trailer பார்த்துட்டு போகவா என்னனு யோசிச்சேன். தியேட்டர் பக்கம் போய் ரொம்ப நாளாச்சுன்னு தான் போனேன். படம் பார்க்க உட்காந்ததும். என் புஜ்ஜுமா சொன்ன முதல் விஷயம் படம் நல்லா இல்லைனா என்னை ஒன்னும் சொல்ல கூடாது. அதுக்கு நான் garenty இல்லைன்னு.
நடிகர்கள் எல்லாரும் புதுசு தான். முக்கியமா அந்த மூணு பேருமே புது முகம் தான் ஹீரோ + நண்பர்கள். ஓவர் ஆக்டிங் பண்ணாம அசால்ட்டா நடிச்சிருகாங்கப்பா நம்ம ஹீரோக்கள். ஹீரோ வோட நண்பர் செமையா காமெடி பண்ணுறார்பா. அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. அவர் என்ன பண்ணினாலும் காமெடியா போகுது. அது அவரோட நடிப்பாலன்னு கூட சொல்லலாம்.
Amway : இதாலதாங்க நம்ம தான் ஹீரோ + heroine ஒருத்தர் ஒர்த்தர் பேசிக்கிறாங்க. சும்மா சொல்ல கூடாதுங்க படத்தை எடுத்தவருக்கு amway யால பயங்கரமா எங்கையோ அடிவிளுந்துருக்கும்ன்னு நினைக்கிறேன். எனக்கே அந்த அனுபவம் இருக்கு அவருக்கு இருக்காதா. Amway அப்படின்னு வர்ற சப்ஜெக்ட் எப்பவும் போல படம் தொடக்கத்துக்கு அவங்க போடுற பிள்ளையார் சுழிதான்.
இப்போ வர்ற படத்துல எல்லாம் ஹீரோயினுக்கு எங்க சார் கதை இருக்கு. அதே தான் இந்த படத்துலையும் ஹீரோயின் சும்மா கதைல ஹீரோக்கு ஜோடி வேணுமேன்னு. ஹீரோயின் அப்பா சின்ன குழந்தையா இவங்க இருக்கும் போது ஒரு சிட்பன்ட்ல பணம் போட்டு ஏமாந்து தற்கொலை பண்ணிடுராறு. அதனால ஹீரோயின் Amway நம்பி வேலை பார்க்காங்க Gold,Silver, Daimond. அவ்ளோதான் ஹீரோயின் கதை.
சின்ன சின்னதா ஆட்டைய போட்டு பொழப்ப நடத்துற நம்ம ஹீரோகிட்ட பெருசா ஒரு நகை கடைய ஆட்டைய போட்டு செட்டில் ஆகுற ஆசையை காட்டுறாங்க. அவர் அதெல்லாம் முடியாதுன்னு போரார், ஏன்? அப்படின்னு பார்த்தா அதை செய்ய சொல்லுறது பிளாஷ் பேக்ல சிட்பண்ட் வச்சு மக்களை ஏமாத்தினவர்னு அவர் சொல்லி அவரோட சண்டை போடுறார். சிட்பண்ட் காரரும் ஹீரோவும் ஒருத்தரை ஒருத்தர் மோதிகிறாங்க. கோவத்துல ஹீரோ கடைய கொள்ளை அடிக்கிறதை கடையோட ஓனர் கிட்டயே போய் சொல்ல. அவர் பிளானுக்கு சொந்தக்காரரை ஆள் வச்சு கொள்ள அனுபிடுராறு. அடிபட்டவரு மருத்துவமனைல இருக்கும் போது நகை கடைகாரர் நடந்தெல்லாம் வந்து சொல்லிட்டு மிரட்டிட்டு போறாரு. இதுக்கு இடைல ஹீரோவ இன்னொரு ரௌடி கும்பள் தொரத்துது.
ஹீரோ ஏமாத்து வேலை செஞ்சுதான் பணம் சம்பதிக்கிராறு அப்படின்னு ஹீரோயினுக்கு தெரிஞ்சதும். ஹீரோ வீட்டுல வந்து சண்டை போடுறாங்க. அந்த சமயத்துல ஹீரோ போய் நகை கடைக்காரன் வந்து சொன்னது எல்லாம் சொல்லிட்டு. சிட்பண்ட்ல இவர் ஏமாத்தலை இவர்தான் நகைக்கடைகாரன் ஏமாத்தினான். அதான் நாங்க கொள்ளை அடிக்க சொல்லி பிளான் கொடுத்தோம்ன்னு சொன்னதும். ஹீரோயின் மனசுல அவர் சிட்பண்ட்காரர் பத்தி மனசுல போட்ட தப்பான எண்ணம் எல்லாம் நினைச்சு அழுதுட்டு ஹீரோக்கு புத்தி சொல்லிட்டு போனாங்க.
இதையெல்லாம் நினைச்சு ஹீரோ சிட்பண்ட்காரருக்கு நல்லது பண்ணும்னு நினைச்சு. அதே நகை கடைக்காரன்கிட்ட உங்க கடைய கொள்ளை அடிக்க போறோம்ன்னு சொல்லி. அவர் சம்மதத்தோட எலி, பொறி, வடைன்னு சொல்லி அவர் கடைய ஆட்டைய போட்டு. போலீஸ் எல்லாத்துலையும் அவர்தான் அவர் கடைய கொள்ளை அடிக்க சொன்னதுன்னு நம்ப வைக்கிறாரு ஹீரோ. அதோட தன்னை தொரத்திக்கிட்டு வந்த வில்லனையும் அதே கேசுல அழகா கோர்த்துவிட்டுடுராறு அதான் படம்.
மொத்ததுல படம் முழுக்க நல்லா காமெடியாவும் தேவையான இடத்துல சீரியஸும் அருமையா கொடுத்துருக்காங்க நம்ம டைரக்டர். செம படம். ஆனா trailerல உள்ளது நிறைய படத்துல இல்லை. அதனால நானும் கொஞ்சம் குழம்பினேன். படம் போய் தியேட்டர்ல பாருங்க அருமையா இருக்கும்.... bye

