Monday, October 28, 2013

வாழ்க்கை ஒரு சாக்கடை

வாழ்க்கை எனக்கு நிறைய பாடம் கற்று தந்திருக்கிறது .......
இன்னும் கற்றுக்கொண்டும் இருக்கிறேன்.....
சில விஷயங்கள் இன்னும் எனக்கு முழுமையாக புலப்படவில்லை....
சில பாடங்கள் நியாயமாகவும்.....
சிலவை அநியாயமாகவும் இருக்கிறது...
சில பாடம் இப்படி தான் இருக்குமா என்று ஆராய்ந்து பார்த்தால்....
இல்லை.....இல்லை இப்படி மாற்றி அமைத்திருக்கிறார்கள் என்று

இப்போது தான் புலப்படுகிறது....
இப்படி அவரவருக்கு தகுந்தாற்போல் சட்டத்தையும்,நியாயத்தையும்
மாற்றி அமைத்தால் பூமி எப்படி தாங்கும்....
இல்லையேல் நாம் தான் எப்படி தாங்குவோம்....
இதை நாம் திருப்பி கேட்டால் திமிரு பிடித்தவர் என்றெல்லாம் பட்டம் கொடுப்பார்கள்...

இதையெல்லாம் ஏற்றுக்கொண்டு இன்னும் எத்தனை காலத்திற்கு
இப்படியே  மனிதர்கள் வாழ முடியும்...எப்படி தான் வாழ போகிறார்களோ...
இதனால் தான் (சாதி,மதம்,இனம்,வீட்டு) கலவரம், சண்டை என்றெல்லாம் உருவாகிறது..

இதற்க்கு என்றுமே தீர்வு கிடையாதா என்றால் கிடையாது........அவர்களாக புரிந்து கொள்ளும்வரை :-/ 
இப்படிபட்ட நிலையில் யாரேனும் நமக்கு உதவியாக இருந்தால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் .....
இல்லையென்றால் நாம் அனாதையாக இருக்கோம் என்கிற உண்மை புலப்பட்டுவிடும் .......

                               கலிகாலம் முற்றிவிட்டது இனி கடவுளுக்கு தான் வெளிச்சம்


                                               

No comments:

Post a Comment