Tuesday, January 8, 2013

நீ என்னுடன்.......

நீ என்னுடன்.......

எப்போது நீ என்னுடன் இருந்தாய்
இப்போது என்னை விட்டு செல்வதற்கு?
பணம் தேட அயல் நாடு...
வீட்டில் இருக்கும்போது
நண்பர்கள், உறவினர்கள்,
தோட்டம், இயற்கை,
ஓவியம், புத்தகம்,
கண்காட்சி, என்று எத்தனை எத்தனையோ
காட்சிகளும் சம்பவங்களும் உனக்கு......
இதில்
என்னை நினைக்க உனக்கு ஏது நேரம்?
வாழ்ந்தோம், வாழ்கிறோம், வாழ்வோம்,
வாழாமலே வாழ்ந்து கொண்டு......
கணவன் மனைவியாக.....
இதில் நல்ல ஜோடி பொருத்தம்
என்ற விருதுகளையும் வாங்கிக் கொண்டு.....

No comments:

Post a Comment