காத்திருப்பதும் ஒரு சுகம் தான்
அதிலும், உனக்காக காத்திருப்பதை விட பெரிய சுகம்
இந்த உலகில் வேறு ஏதும் இல்லை
என் வாழ்க்கையின் அர்த்தமே உன்னிடத்தில் இருந்து தானே ஆரம்பம்...
அந்த ஆரம்ப கட்டத்தில் இருந்து
நான் காத்துக்கொண்டு தான் இருக்கிறேன் உனக்காக...!
நம் இருவருக்கும் திருமணம் என்று பேச தொடங்கிய நாட்களில் இருந்து
நானும் காத்துக்கொண்டு தான் இருந்தேன் உன்னை பார்க்க ....!
நீயும் வந்தாய் என்னைப் பார்க்க .....!
எனக்குள் ஏதோ உன்னிடம் சொல்ல முடியாத அளவு ஆனந்தம்
ஆனால், உன்னிடம் என்னால் அதை சொல்ல முடிய வில்லை....
ஏனென்றால், உனக்காக நான் காத்திருப்பது உனக்கே தெரியாதே......!
உனக்கும் எனக்கும் நிச்சயம் செய்த நாளில் இருந்து நான் காத்திருந்தேன்
நீ அழைக்கும் தொலைபேசியின் ஒலியை கேட்க ......
எந்த தொலைபேசி ஒலித்தாலும், நான் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லுவது
நான் தான் எடுத்து பேசுவேன் என்று
அதை கேட்டு என் அம்மா அப்பா சிரிக்காத நாளில்லை......
இம்ம் உன் அழைப்பும் வரவே இல்லை...... :(
ஆனால்,
திருமணத்திற்க்கு முந்தைய நாள் காலையில்....
எப்போதும் போல தொலைபேசி அழைப்பு வந்தது ....
நீ தான் போன் செய்திருந்தாய்....!
உன்னிடம் நான் பேசியது மிக மிக குறைவு என்பதால்
நீ பேசியதை கூட நான் மச்சான் பேசுவதாக நினைத்து
அம்மாவிடம் கொடுக்க போனேன்.....!
நான் தான் கண்ணன் என்று உன் பெயரை சொன்னதும்
எனக்கே ஆச்சர்யம் என்னிடம் பேசுவது நீ தான என்று.....!
என் அம்மா நான் பேசுகிறேன் என்று சொன்னதும்
நான் தரமாட்டேன் என்று சொல்லி தனியே வந்து பேசினேன்....!
நீயோ என்னிடம் தான் பேசனும் என்று சொன்னாய்....!
நான் நினைத்து கூட பார்காத அளவுக்கு
எனக்கு சந்தோஷ அதிரிச்சி காத்திருந்ததை
நாம் பேசிய அந்த உரையாடலின் போது தான் அறிந்து கொண்டேன்.....!
நான் உன்னிடம் பேசுவதற்காக இவ்வளவு நாள் காத்திருந்ததால் என்னவோ கடவுள் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தினார் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டேன்..!
அதற்க்கு இடையில் என்றாவது ஒரு நாள் என்னை பார்க்க நீ வருவாய் என்று காத்துக்கொண்டு இருந்தேன்......!
அதனால் வீட்டில் யாரேனும் கதவில் உள்ள
மின்சார மணியை அழுத்தினாலும் சரி,
கதவை தட்டினாலும் சரி நீதானோ என்று ஓடி வந்து
கதவருகில் இருக்கும் ஜன்னலின் திரையை விளக்கி பார்ப்பேன் .......
அதில் எனக்கு கிடைத்தது வெறும் ஏமாற்றம் மட்டுமே....!
ஏனோ தெரியவில்லை எதிர் பார்த்து கிடைக்கும் சந்தோஷத்தை விட
எதிர் பாராமல் கிடைக்கும் சந்தோஷம் ஏனோ எனக்கு அதிகமாய் பிடிக்கும்.....
அதனால் கூட நடக்காத இந்த (நீ வீட்டிற்க்கு வரும்) விஷயத்தை ஆர்வமாக நான் எதிர் பார்த்திருந்தேனோ என்னவோ....
திருமணதிற்கு 4 நாள் முன் மண்டபம் பார்க்க எல்லாரும் வந்த போது
நீயும் வருவாய் என நினைத்தேன் ஆனால் நீ வரவில்லை
அதிலும் மிஞ்சியது ஏமாற்றம் தான்
உனக்காக நான் காத்திருப்பதும் நன்றாகத் தான் இருந்தது.....
நம் திருமணத்திற்க்கு பிறகு ஒரு மாதம் இருந்து விட்டு
நீயோ வெளிநாடு சென்று விட்டாய்....!
நானோ விசாவுக்காக காத்துக்கொண்டு இருந்தேன்.....
ஏனென்றால் அது கிடைத்தால் தானே உன்னைக் காண
நான் அங்கே வர முடியும்......!
நான் இங்கு வந்த நான்கு நாட்களில்
மறுபடியும், நீ வேறு ஒரு நாட்டிருக்கு
வேலை விஷயமாக செல்ல வேண்டும் என்று சென்று விட்டாய்.....
வர பதினைந்து நாட்கள் ஆகும் என்று நீ சொன்னாய்....
நானும் உன் வருகைக்காக காத்துக்கொண்டு இருந்தேன்.....
நீயும் வந்தாய் ........
நான் நினைத்துக்கொண்டேன்
இதோடு, உனக்காக நான் காத்திருந்த காலம் எல்லாம் முடிந்தது என்று...!
உன்னை விட்டு நான் தனியாக இருந்த கால கட்டத்திலெல்லாம்
நான் நினைத்தது உன்னை...உன்னை...... உன்னையே மட்டும் தான்...!
உனக்காக காத்திருந்தாலும் நான் உன்னையே நினைக்கும் பட்சத்தில்
நான் ரொம்பவே சந்தோஷமாக இருந்து வந்தேன்......!
நான் உன்னை பற்றி நினைப்பதில் ஒரு பங்காவது
என்னைப் பற்றி நீ நினைக்க மாட்டாயா என்று எண்ணி
எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொள்வேனடா.....!
உன்னை விட்டு இப்படி அடிக்கடி பிரிந்து...
நான் அவஸ்த்தைப்படுவதை பார்த்து....
அந்த கடவுள் சந்தோஷப்படுகிறாரோ என்னவோ.....
என்னுடன் இப்படி அடிக்கடி விளையாண்டு கொண்டே இருக்கிறார்...!
நான் உன் மீது அதிக அளவு பாசம் வைத்திருக்கிறேனா என்று சோதித்து பார்க்கிறாரா தெரியவில்லையே....!
என் கண் முன்னாடி அந்த கடவுள் வந்து நின்றால்....
நான் ஒன்று மட்டுமே அவரிடம் கேட்பேன்.....
உனக்கு நியாயமே இல்லையா?
ஏன் இப்படி என்னை அடிக்கடி தனிமையிலே தவிக்க வைக்கிறாய் என்று...!
(கடவுளிடம்) நீ தனிமையில் இருந்து பார்....
என் நிலைமை உனக்கு புரியும் என்று சொல்லுவேன்...!
ஆனால்,
அவர் இப்படி தவிக்கவிடவில்லை என்றால்....
நான் உன் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் என்று
எனக்கே தெரியாமல் போயிருக்கும்....!
அதுக்காக அந்த கடவுளுக்கு நன்றி சொல்லிகிறேன்....!
ஆனால்,
போதும் இதுக்கு மேல இந்த மாதிரியான பிரிவு எல்லாம் வேண்டாம்.....
அதை தாங்கும் அளவுக்கு எனக்கு மனமில்லை....!
சரி, அதுதெல்லாம் போகட்டும்
இது வரை நான் உனக்காக காத்திருந்த காலமெல்லாம் போதும்.....
இனியும் என்னை இப்படி தனியே தவிக்க விட்டு செல்லாதே...............
சீக்கிரம் வந்துவிடு ........ உனக்காக நான் இங்கே காத்துக்கொண்டே இருக்கிறேன்...........!
இப்படிக்கு,
உன் அன்பு மனைவி


முதலில் உங்களுக்கு:
ReplyDeleteஎல்லா கணவரும் தன்னுடைய அன்பை மனைவிக்கு எளிதில் வெளிபடுத்த மாட்டார்கள், மனசுக்குள்ளேயே வைத்து சந்தோஷப்பட்டு கொள்வார்கள். சிலர் அதை வெளிப்படையாக காட்டிக்கொள்வார்கள், ஒரு சிலர் காட்டிக்கொள்ள மாட்டார்கள் .... அதில் உங்கள் கணவர் முதல் வகை ........
அடுத்து உங்கள் கணவருக்கு:
எந்த ஒரு பெண்ணும் தன் கணவனிடம் எனக்கு அந்த இடத்தை வாங்கி தாருங்கள், கையில் செலவுக்கு பல லட்சம் கொடுங்கள் என்று நச்சரிப்பதில்லை. மாறாக, அவர்கள் கேட்பது சில விஷயங்கள் மட்டுமே அது என்ன என்றால், சமையலோ, இல்லை அவள் உடுத்திய ஆடையோ நன்றாக இருக்கிறதா என்று, தன் கணவன் வாயால் சொல்ல வேண்டும் என தான் நினைப்பார்கள். எல்லா பெண்களும் அப்படிதான் கணவனிடம் எதிர் பார்ப்பது இந்த மாதிரி சின்ன சின்ன விருப்பங்கள் தான் தவிர, பெரிதாக ஏதும் எதிர் பார்ப்பது இல்லை.இந்த மாதிரியான சின்ன சின்ன சந்தோஷத்தை கூட எல்லா ஆண்களும் கொடுப்பது இல்லை.
இப்படியும் சில ஆண்கள் இருக்கிறார்கள் என்று நான் இந்த வீடியோ பார்த்து தான் புரிந்து கொண்டேன்.
நான் ஏன் இப்படி ஒரு கமெண்ட் போட்டேன் என்று இந்த வீடியோ பார்த்தால் உங்களுக்கே புரியும்.
அதுக்காக இந்த வீடியோ
Made For Each other,Please see the link,
http://youtu.be/MZw32VmkMoo
நீங்கள் என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு நல்லா புரியிது. எல்லா பெண்களும் கணவனிடம் எதிர் பார்ப்பது என்ன என்றால் மனைவியின் நலனில் கணவன் அக்கறை எடுத்துக்கொள்வது, பாராட்டுவது, ரசிப்பது இது மூன்றும் தான் எல்லா பெண்களும் விரும்புவது. சில பெண்களுக்கு அந்த சந்தோஷம் கிடைக்கிறது சிலருக்கு கிடைப்பதில்லை. இந்த மாதிரியான செயல்களை, எந்த பெண்ணின் பெற்றோரோ, இல்லை தோழியோ சொல்லுவதை விட தன் கணவன் சொல்ல வேண்டும் என்று தான் ஆசைபடுவாள். இது எல்லா பெண்களுக்கும் உள்ளது தான். எந்த பெண்ணும் நான் அப்படியெல்லாம் இல்லை என்று சொல்ல முடியாது. எல்லா பெண்களின் மனதிலும் இருக்க கூடிய சின்ன சின்ன ஆசைகள் தான் அது.
ReplyDeleteஉதாரணமாக: திருமணம் ஆனா பெண் ஒருத்தி வெளியில் திருவிழா காண தன் கணவனுடன் செல்ல இருக்கிறாள். அவள் அதற்க்கு தயாராக கிளம்பியதும் தன் கணவன் தன்னிடம் இந்த உடை உனக்கு பொருத்தமாக உள்ளது, இல்லை இதை விட அந்த உடை உனக்கு நன்றாக இருக்கும், இன்னைக்கு நீ அழகா இருக்க என்று, ஏதாவது ஒரு சில ஆசை வார்த்தைகள் இதை பற்றி சொல்ல மாட்டாரா என எல்லா பெண்களும் ஏங்குவது உண்டு. இது எல்லா ஆண்களுக்கும் தெரியுமோ தெரியாதோ. ஆனால், இப்படி பெண்கள் தங்களுக்குள்ளேயே ஒரு சில ஆசைகள் வைத்திருப்பது உண்டு. இதை, அவள் அத்தையோ, இல்லை அம்மாவோ, இல்லை தோழியோ......யார் சொன்னாலும் அவளுக்கு அது ஒன்றும் பெரிதாக தெரியாது. தன் கணவன் இதை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என அவள் கவலைப்படுவது நிச்சயம் உண்டு.
இது மட்டும் தான் என்று இல்லை. சாப்பாடு செய்வதில், சில செயல்கள் செய்யும் போது, நல்ல ஐடியாக்கள் தரும்போது.......... என்று இன்னும் சில இருக்கிறது சொல்லனும் என்றால் சொல்லிக் கொண்டே போகலாம். எல்லா கணவனும் மனைவியை பற்றி கொஞ்சம் யோசிக்க தொடங்கினாலே போதும் அவர்களுக்கே புரிய ஆரம்பிக்கும். யோசிக்காத வரை ஒன்றும் புரியப்போவது இல்லை . அதற்காக எல்லா கணவனும் அப்படி தான் என்று சொல்லவும் மாட்டேன்.....அப்போ நாங்களாம் எங்கள் மனைவி பற்றி யோசிக்கவில்லை என்று சொல்கிறீர்களா .....அப்படின்னு சண்டைக்கு வராதிங்க........நான் பொதுவாக நடப்பதை சொன்னேன். பெண்களின் மனது இவ்வளவு தான்........இதை எல்லா ஆண்களும் புரிந்து கொண்டால்....... எல்லா பெண்களுக்கும் சந்தோஷம் என்று தான் சொல்ல வந்தேன்.
இந்த வீடியோவை பார்த்து ஒரு சில விஷயங்கள் தெரிந்து கொண்டேன். அந்த பெண் தன் கணவனிடம் இருந்து சில அன்பான வார்த்தைகளை மட்டும் தான் எதிர் பார்த்திருக்கிறாள். ஆனால், அவனோ இதை சொல்லி என்ன ஆகா போகுது என்று சாதாரணமாக எடுத்திருக்கிறான்.
///////////
இது எல்லாம் எனக்கு தெரிந்த சின்ன சின்ன விஷயங்கள். இதை எல்லா கணவனும் கடைபிடித்து பார்த்தால், இப்போது உள்ள வாழ்க்கையை விட இன்னும் சந்தோஷமான, பிரகாசமான வாழ்க்கையாக .......... உங்கள் வாழ்க்கை மாறும் (தொடங்கும்). வேண்டுமானால் ஒரு முறை முயற்ச்சி செய்து பாருங்கள் உங்களுக்கே புரியும் 🐹
இதுல ஏதும் சந்தேகம் இருக்கா உங்களுக்கு தாராளமாக கேளுங்கள் எனக்கு தெரிஞ்சதை சொல்லுறேன்.
இதை பார்த்தாவது சில புரியாத ஆண்களுக்கு புரியட்டும்....... இந்த வீடியோ எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. இந்த வீடியோ பதிவை இதில் பகிர்ந்து கொண்டைமக்காக உங்களுக்கு மிக்க நன்றி :) Nishanth