என்னை அறிந்தால் : Awesome movie smile emoticon wink emoticon
இந்த கதை நிஜமாவே இவ்ளோ நல்லா இருக்கும்னு நாங்க எதிர் பார்க்கலை . கெளதம் சார் நல்லாவே படம் எடுத்துருக்காங்க. விண்ணைத்தாண்டி வருவாயா எல்லாரும் அப்படி இப்படின்னு சொல்லுறாங்க. ஆனால், இது நாள் வரை எனக்கு அந்த படம் பார்க்கனும்னு தோனவே இல்லை. காரணம் என்னனு கேட்டா ? அதுல திரிஷா marriage பண்ணிட்டு மறுபடியும் வந்து பேசுறது அது இதுனு ரொம்ப இதா போச்சு ... சரி விடுங்க நம்ம கதைக்கு வரலாம். நான் முதல் முறையா தேட்டர்ல போய் பார்த்த முதல் அஜித் படம் இதான் .... படத்தோட ஆரம்பத்துல ஏன் டா இப்படி ஜவ்வா இழுக்குறீங்க கதைக்கு வாங்கனு புலம்பினா//// என் புஜ்ஜுமா இரும்மா இப்போதான ஆரம்பிச்சுருக்கு அதுக்குல்ல எல்லாம் சொல்லனும்னா எப்படின்னு சொன்னதும். வாயை மூடிட்டு படம் பாத்தேன் .. அனுஷ்கா introduction சாதரமா இருந்துது எனக்கு அது ரொம்ப புடிச்சுருந்துது ... பொதுவா எல்லா படத்துலையும் ஹீரோயினா முடி புஸ்ஸுன்னு பறக்குறதும், வாய் அசைகிறது, மேல இருந்து கீழ வரைக்குனு அரைமணிநேரம் காட்டாம அழகா சிம்பிளா காட்டிருந்தாங்க. அது எதார்த்தமா இருந்துது .... அனுஷ்கா, அஜித்த முதல்ல பார்த்ததுல இருந்து மனசுக்குள்ள புலம்பிகிட்டே இருந்தது படத்துல காட்டனும்னு அவசியம் இல்லை....
அருண் குமார் சார் : நிஜமாவே செமையா நடிச்சுருந்தாரு. முதல் முறையா அவரோட நடிப்ப பார்த்து நான் ரொம்பவே ரசிச்சேன்... என் கணவர் கிட்டையும் அடிக்கடி சொல்லிட்டு இருந்தேன்... ரொம்ப நாள் கழிச்சு தேட்டர்ல இன்னைக்கு கொஞ்சம் எனக்கு கண்ணெல்லாம் கலங்கிடுச்சு, அஜித் சார் நடிப்பை பார்த்து. கதை நல்லாவே இருந்துது. அப்பாவா, காதலனா, போலீசா சான்சே இல்லை. அருண் குமார் சாருக்கு இந்த படத்துல நல்ல வில்லனா சூப்பரான character.
திரிஷா படத்துல தேவையான்னு நினைக்கும் போது : ஒரு திருமணம் ஆனா பொண்ண கணவன் கைவிட்ட சமையத்துல, குழந்தையோட தனியா இருக்கும் போது அடுத்து வாழ்க்கைல என்ன பண்ணணு நினைக்கும் போது, ஒருத்தர் வந்து உனக்கு நான் இருக்கேன்னு நம்பிக்கையும் ஆறுதலும் கொடுத்தா எப்படி இருக்கும் ... அங்க தான் அஜித் சாரோட காதல் பற்றி நாம அழகா பார்க்கலாம். இது சகஜமா ஒரு பொண்ணோட வாழ்க்கைல நடக்குறது. அதை அழகா உணர்வு பூர்வமா கெளதம் சார் காட்டிருக்காங்க.
இந்த படத்துல நடிச்ச எல்லோரும் அவ்ளோ அருமையா நடிச்சுருந்தாங்க. அஜித் தன் நண்பனோட பொண்ணை காப்பத்த யோசிக்கும் போது அந்த பொன்னே நீ காப்பாத்தி கூடிட்டு வாப்பான்னு சொல்லிகிட்டே போலிஸ் ஷூ எடுத்து கொடுக்கிறது ரொம்ப அருமையா இருக்கும், கண்ணுல தண்ணீரே வந்துரும். அந்த குழந்தைக்காக தான் அவர் வேலையை விட்டார். அப்பா அம்மா இல்லாத குழந்தையை எவ்ளோ நல்லா கேர் எடுத்து பார்த்துகிட்டாருன்னு படத்துல காட்டும் போது அருமையா இருக்கு.
நண்பனோட பொண்ணை காப்பாத்த போய் அன்ஷ்கா கதைல வர்றது இன்னும் நல்லா இருக்கு. கடைசில திரிஷா இறந்த கதை, தன் குழந்தையை காப்பாத்தனும்னு மனசுல துடிக்க, அனுஷ்கா உயிரையும் காப்பத்தனும்னு அவர் கணக்கு போட்டு காப்பாத்துறது தான். கதை..... இதுல நிறைய நல்ல காமெடி எல்லாம் விவேக் சார் அருமையா பண்ணிருந்தாங்க ...................... awesome movie


No comments:
Post a Comment